கூட்டமைப்பு உறுப்பினர்கள் முரண்படுவது ஆரோக்கியமானதல்ல - இந்த நிலைமை தொடரக் கூடாது சித்தார்த்தன் - Yarl Voice கூட்டமைப்பு உறுப்பினர்கள் முரண்படுவது ஆரோக்கியமானதல்ல - இந்த நிலைமை தொடரக் கூடாது சித்தார்த்தன் - Yarl Voice

கூட்டமைப்பு உறுப்பினர்கள் முரண்படுவது ஆரோக்கியமானதல்ல - இந்த நிலைமை தொடரக் கூடாது சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைபிபினர்களுக்கிடையே முரண்பாடுகள் அல்லது கருத்து மோதல்கள் ஏற்படுவது ஆரோக்கியமாவை அல்ல. இந்த விடயங்கள் தொடர அனுமதிக்காமல் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூடடமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பினருக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பதாக வெளியாகின்ற செய்திகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஒரு கட்சிக்குள் இருக்கின்ற சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே முரண்படுவது குற்றஞ்சாட்டுவது நல்ல விசயமல்ல. ஆனாலும் ஒரு தேர்தல் அரசியல் என்று வருகின்ற போது இப்படியான விசயங்கள் நடைபெறுவது வழக்கம். எது எவ்வாறு இரப்பினும் உண்மையில் இதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு அவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்ளத் தவறினால் கட்சித் தலைமையாவது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆகையினால் அதற்கான நடவடிக்கையை கட்சித் தலைமை எடுக்கலாம். ஆகவே அவ்வாறு எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post