மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் நடித்திருந்த நித்யா மேனன் கெட்ட வார்த்தைகள் பேச தயங்கினேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நித்யா மேனன் அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் குறித்து நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில்இ 'நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படம் என்றாலே பிடிக்கும். காசை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்கு பிடிக்கும். மிஷ்கின் போன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது நடிப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்ததுதான் என்றாலும் சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது. அவற்றை என் வாழ்க்கையில் நான் பேசியதே இல்லை. பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பேசியிருந்தேன். பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. மிஷ்கின் என்னை அவர் குழந்தைபோல பார்த்துக் கொண்டார். பாப்பா என்றுதான் அழைப்பார்' என்றார்.
கெட்ட வார்த்தை பேசுவதற்கு தயங்கினேன்
Published byYarl Voice Editor
-
0
Tags
cinema
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.

Post a Comment