காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில் திறந்து வைப்பு - Yarl Voice காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில் திறந்து வைப்பு - Yarl Voice

காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில் திறந்து வைப்பு

சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள் விளையாட்டு பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஐஸ்வரயா ராய் அனுஷ்கா சர்மா பிரியங்கா சோப்ரா முன்னனி நடிகர்களான ஷாருக்கான் நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வடிவமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

 நடிகை காஜல் அகர்வாலே அவரது மெழுகு சிலையை திறந்து வைத்தார். காஜல் அகர்வாலின் மெழுகு சிலை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post