பயங்கரவாத புகலிடம் பாகிஸ்தானில் இல்லை - பிரதமர் இம்ரான்கான் - Yarl Voice பயங்கரவாத புகலிடம் பாகிஸ்தானில் இல்லை - பிரதமர் இம்ரான்கான் - Yarl Voice

பயங்கரவாத புகலிடம் பாகிஸ்தானில் இல்லை - பிரதமர் இம்ரான்கான்

கடந்தகாலத்தில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களின் புகலிடம் எதுவும் இல்லை என்று பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசு தலீபான் ல‌‌ஷ்கர்  தொய்பா ஜெய்‌‌ஷ்  முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாக இந்தியா அமெரிக்காஇ ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச கருத்தரங்கில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசும்போது ''கடந்தகாலத்தில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போது பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களின் புகலிடம் எதுவும் இல்லை. இப்போது எங்களுக்கு ஒரே தேவை ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்பதே'' என்றார்.

இந்த கருத்தரங்கில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டெரசும் கலந்துகொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post