கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இந்தியாவிலிருந்த கொண்டு வரப்பட்ட கஞ்சா கடத்தப்படுவதாக பளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பளை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று படகில் இருந்த கஞ்சா இறக்கி கடத்த முற்பட்பட்ட போது 114 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதுடன் குறித்த படகையும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணையை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment