மார்ச் 15 மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா - படக்குழுவின் அறிவிப்பால் ரகிகர்கள் மகிழ்ச்சி - Yarl Voice மார்ச் 15 மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா - படக்குழுவின் அறிவிப்பால் ரகிகர்கள் மகிழ்ச்சி - Yarl Voice

மார்ச் 15 மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா - படக்குழுவின் அறிவிப்பால் ரகிகர்கள் மகிழ்ச்சி

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா கவுரி கி‌ஷன் வி.ஜே.ரம்யா ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post