யாழ்ப்பான மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பானம் அரியாலைப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு போதனைக்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்திருந்த போதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது.
அவருடன் தனி அறையில் உரையாடிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பணத்தில் இனம்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி ஆவார்.
இந்த சம்பவத்தை அடுத்து அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்ற 182 பேரை சேர்ந்த 80 குடும்பங்கள் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ள நபரின் கிராமமான தாவடிப் பகுதியில் தோற்று நோய் மருந்துகள் அடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அப்பகுதியில் வாழும் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டலும் வெளியில் நடமாட அனுமதிக்கப் படமாட்டார்கள்
.இவ்வாறு பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
Post a Comment