கொரோனோ அச்சத்தால் நாளைமுதல் ஏப்பிரல் 20 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு - Yarl Voice கொரோனோ அச்சத்தால் நாளைமுதல் ஏப்பிரல் 20 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு - Yarl Voice

கொரோனோ அச்சத்தால் நாளைமுதல் ஏப்பிரல் 20 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான ஏப்ரல் மாத விடுமுறையை நாளை முதல் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும உத்தியோகப்பூர்வமாக சற்று முன்னர் அறிவித்தார்.

தற்பொழுது பத்தரமுல்லை இசுறுபாயவில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post