மாஸ்டர் படத்தையடுத்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் நடிக்க இருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தையடுத்து விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜயஇ ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் ரசிகர்களுடன் பேசிய வீடியோவில் ''எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தான் நாங்கள் கூடிய விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம்'' என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதாக பேசிக்கொண்டிருக்கும் படத்தில் இவர் தான் ஹீரோயின் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Post a Comment