கொரோனோ வைரஸ் தொற்கை கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது அமுல்ப்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய போதுமான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. ஆகவே பட்டினியால் வாடுகின்ற மக்களுக்கு உதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.நிசாந்தன் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்னால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.; மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளிறகமை; தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதால் நாட்டில் வாழும் பெருமளவிலான மக்கள் உச்சகட்ட பட்டினியை எதிர் நோக்கி உள்ளார்கள. அவர்களின் பாதிப்பு தொடர்பில்; இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதில் தவறு ஏதும் இல்லை என்றாலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் இருந்த சிறு கால அவகாசத்திலாவது நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் அன்றாட உணவு நிலைமையைப் பற்றி இந்த அரசாங்கம் சற்று சிந்தித்துப் பார்த்திருந்தால் இன்று நாட்டில் இந்த மோசமான உணவு பட்டினி நிலை ஏற்பட்டிருக்காது.
குறிப்பாக தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அத்தியாவசிய அடிப்படைப் பிரட்சனைகளோடு தான் வாழ்கின்றார்கள்.
இங்கு தினமும் வேலைக்குச் சென்றால் தான் ஒருவேளை உணவாவது கிடைக்கும் என்று வாழும் எம் மக்களுக்கு இப்பொழுது அடிவயிற்றில் நெருப்பைக் கட்டி விட்டது போல் இந்த அரசின் பொறுப்பற்ற தனத்தினால் பல குடும்பங்கள் பட்டினிச்சாவைக் கூட எதிர்நோக்கியுள்ளதை இந்த அரசாங்கமும் எமது தமிழ் அரசியல் தலைவர்களும் அறிவார்களா என்றால் இல்லை.
இந்த அரசினால் இதுவரை எம்மக்கள் அனைவருக்கும் பாராபட்சமின்றி அவர்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இந்நாள் வரையும் எதாவது முயற்சிகள் செய்யப்பட்டு இருக்கின்றனவா என்றால் இல்லை. எனவே ஜனாதிபதி கோட்டாபாய தலைமையிலான இந்த அரசு இதுவரையும் மக்களுக்கு கூறிவந்த எதையுமே நிறைவேற்ற தவறியுள்ளது என்பதே நிதர்சனமாக உள்ளது.
மாறாக எம் வறுமையில் வாழும் மக்களின் வாழ்கையோடு விளையாடுவதைத் தவிர்த்து இனிமேலாவது எம் வடக்கு கிழக்கு உட்பட நாட்டு மக்களினது இக்கட்டான உணவு நெருக்கடி நிலைமையை உணர்ந்து இப் பிரச்சனைக்கு உரிய தீர்வுகளை; எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் இதுவரை நாளும் எமது வடக்கு கிழக்கு பகுதிகளில் எம் மக்களின் நிலையறிந்து இரவு பகலாக மிகவும் சிரமத்தின் மத்தியில் பணியாற்றும் இளைஞர்கள் சமூக சேவை அமைப்புக்கள் ஒரு சில வர்த்தகர்கள் ஒரு சில மனிதநேயம் கொண்ட அரசியல் வாதிகள் என தன்னார்வமாக உதவி புரிந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment