கொரோனா வைரஸ் தொற்றால் ஹோலி கொண்டாட்டத்தை ரத்துச் செய்த மோடி - Yarl Voice கொரோனா வைரஸ் தொற்றால் ஹோலி கொண்டாட்டத்தை ரத்துச் செய்த மோடி - Yarl Voice

கொரோனா வைரஸ் தொற்றால் ஹோலி கொண்டாட்டத்தை ரத்துச் செய்த மோடி

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ரத்துச் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்குமாறு சுகதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எதிர்வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவிருந்த கண்டாட்ட நிகழ்ச்சியை ரத்துச் செய்வதாக பிரதமர் மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சீனா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவைத் தவிர்த்து உலக நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

உயிரிழப்பு மூவாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவிலும் தற்போது 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post