அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவர அனுமதி - பதிவு செய்யுமாறு அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவர அனுமதி - பதிவு செய்யுமாறு அரச அதிபர் கோரிக்கை - Yarl Voice

அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவர அனுமதி - பதிவு செய்யுமாறு அரச அதிபர் கோரிக்கை

கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சாரதி மற்றும் உதவியாளரின் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.
இதுதொடர்பில் மாவட்டச் செயலாளர் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குத் தேவையான அத்தியாவசியப் உணவுப் பொருள்களை கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவு செய்து எடுத்து வரவும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்குமான வாகன வழி அனுமதி வழங்கப்படுகிறது.

வாகனத்தின் சாரதிஇ உதவியாளரது பெயர்இ தேசிய அடையாள அட்டைஇ வாகன இலக்கம்இ யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்து வருகின்ற பொருள்கள் ஆகிய விவரத்துடன் உரிய பிரதேச செயலரது பரிந்துரையைப் பெற்று அலுவலக நாள்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மாவட்டச் செயலகத்தின் பரிந்துரையைப் பெற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் - என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post