ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் எயிட் அமைப்பின் மனித நேய உதவி - Yarl Voice ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் எயிட் அமைப்பின் மனித நேய உதவி - Yarl Voice

ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் எயிட் அமைப்பின் மனித நேய உதவி

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான நோயாளர்களது நிலை தொடரும் ஊரடங்கு காரணமாக நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.

அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களிற்கு இன்றைய ஊரடங்கு மத்தியில் வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களிற்கு உதவியாளர்களாக நிற்பவர்களது நிpலை பரிதாபத்திற்குரியதாகியிருந்தது.

நகரிலுள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ஒரு வேளை உணவுக்காக அவர்கள் திண்டாடியமை தொடர்பில் ஊடகவியலாளர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனை யாழ்.எய்ட் மனித நேய உதவி அமைப்பு பணிப்பாளரும் யாழ்.மாநகரசபை உறுப்பினருமான வ.பார்த்தீபனின் கவனத்திற்கு யாழ்.ஊடக அமையம் கொண்டு சென்றிருந்தது.

உடனடியாக விரைந்து செயற்பட்ட அவர் சமைத்த உணவு பொதிகளை இன்றைய இரவுவேளை ஊரடங்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் சகிதம் எடுத்து சென்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்.

நாளைய தினமும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post