சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (8) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகதமையில் அமைந்துள்ள ரிமர் மண்டபத்தில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இக் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வில் சமூக சிற்பிகள் நிறுவனத்தின் யாழ் இளையோர் குழு உறுப்பினர்களும் குருதிக் கொடையில் பங்குபற்றி இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்குபற்றி குருதிக் கொடை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.
Post a Comment