யாழில் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக பதிவு செய்யுங்கள் - சுகாதார திணைக்களம் அறிவுறுத்து - Yarl Voice யாழில் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக பதிவு செய்யுங்கள் - சுகாதார திணைக்களம் அறிவுறுத்து - Yarl Voice

யாழில் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக பதிவு செய்யுங்கள் - சுகாதார திணைக்களம் அறிவுறுத்து


யாழ்.செம்மணி- இளையதம்பி வீதியில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆராத னை நிகழ்வில் கலந்து கொண்டவா்கள் உடனடியாக தங்கள் பெயா் முகவாியை பதிவு செய்யுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.

கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த மதபோதகா் ஒருவாினால் நடத்தப்பட்ட ஆராத னையில் கலந்து கொண்ட இருவா் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள்இ

மாவட்டங்களை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டுள்ளனா். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இருப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற முகவாிக்கு உடனடியாக அறியத்தரவும் என அவா் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post