கொரோனாவின் வைரஸ் குறித்து உலகளாவிய ரீதியாக அச்சம் ஏற்பட்டுள்ள போதிலும் வடக்கில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அமைதியாக இருக்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதிலும்இ யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஊடக சந்திப்பில் வடக்கில் கொரோனா ஆபத்து குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் எனக் கூறியிருக்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடனடியாக மருத்துவத்துறை அதிகாரிகளை இணைத்து பொதுக்கூட்டத்தை கூட்டி முன்னாயத்த நடவடிக்கை குறித்து ஆராய்ந்து மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் பணியில் ஈடுபட்டிருக்கின்ற தன்னார்வ தொண்டர் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மேலும் தெரிவிக்கையில்இ
சீனாவில் கொரோனாவின் தாக்கம் பெருமளவில் இருந்தாலும்இ அது குறித்து சீன அதிகாரிகள் குறைந்தளவான தகவல்களையே வெளியிட்டு வருகின்றனர். தமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற அச்சம் காரணமாக அவர்கள் தமது மக்களின் பாதிப்புக்களை மறைத்து வருகின்றனர்.
அமெரிக்காஇ கனடாஇ இத்தாலிஇ தென்கொரியாஇ ஈரான் போன்ற பல அபிவிருத்தி அடைந்த நாடுகளையே கொரோனா அச்சுறுத்தி வருகின்றது. ஆனால். வடக்கில் இந்த வைரஸ் பரவாதுஇ வடக்கிற்கு ஆபத்து இல்லை என்பது போல யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.
சாதாரணமாக மலேரியாஇ டெங்கு போன்ற நோய்கள் ஏற்பட்டபோதே அவற்றுடன் போட்டியிட்டுஇ கட்டுப்படுத்த சிக்கித் திணறிய வடக்கு மருத்துவ சமூகம்இ சர்வதேச உயிர்கொல்லி நோயான கொரோனா குறித்து அச்சமின்றி இருக்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றனர். புலம்பெயர் உறவுகளின் வருகையும் தொடர்கின்றது. சீனப் பிரஜைகளுக்கும் தடை இல்லை. பன்னாடுகளில் இருந்தும் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் கடத்தப்படுகின்றது.
நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றது. ஆனால்இ பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை இல்லை. சுற்றுலா கடற்கரைகள் மூடப்படவில்லைஇ களியாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எனவேஇ யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடனடியாக மருத்துவத்துறை அதிகாரிகள்இ மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை உள்ளடக்கிய பொதுக்கூட்டத்தை கூட்டி கொரோனா தடுப்பு முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.
வந்தபின் வருந்துவதை விடுத்துஇ முன்னாயத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். யுத்தத்ததால் இலட்சக்கணக்கில் அழிந்தது போகஇ எஞ்சி இருக்கும் தமிழர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். – என தெரிவித்துள்ளனர்.
Post a Comment