யாழில் களமிறங்கிய இரானுவத்தின் கொமாண்டோ அணி - ஊரடங்கை மீறியவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது - Yarl Voice யாழில் களமிறங்கிய இரானுவத்தின் கொமாண்டோ அணி - ஊரடங்கை மீறியவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது - Yarl Voice

யாழில் களமிறங்கிய இரானுவத்தின் கொமாண்டோ அணி - ஊரடங்கை மீறியவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது



யாழ்ப்பாண நகரில் ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் களமிறங்கிய மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் தற்பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகக யாழ்ப்பாண நகரத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு களமறக்கப்பட்டுள்ள இரானுவத்தின் மோட்டர் சைக்கிள் கொமாண்டோ அணி ஊரடங்கு உத்தரவை முறியவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

குறிப்பாக வீதியில் முகக் கவசம் அணியாளமல் நின்றிருந்தவருக்கு அவருடைய மேலங்கியை கழற்றி அதனை முகக் கவசமாக அணியுமாறு அறிவுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post