கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து தேர்தல் பிரச்சார கூட்டங்கள் குறித்து அரச அதிபர் விளக்கம் - Yarl Voice கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து தேர்தல் பிரச்சார கூட்டங்கள் குறித்து அரச அதிபர் விளக்கம் - Yarl Voice

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து தேர்தல் பிரச்சார கூட்டங்கள் குறித்து அரச அதிபர் விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்களுக்கு தடைவிதிப்பது தொடர்பில் எந்த முடிவுகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில்  வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட செய்தியாளர்களால் அவரிடத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிககை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை முடிவு எடுக்கவில்லை.

அரசியல் கட்சிகளின் பிரச்சார கூட்டங்களுக்கு உள்ளுரினை சேர்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். அதனால் பெரிதளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படப்போவதில்லை.

இருப்பினும் திருவிழாஇ ஏனைய விழாக்கள் நடத்தப்படும் போது அதில் கலந்து கொள்வதற்கு வெளியிடங்களில் இருந்து பக்தர்கள் வியாபாரிகள் வருகைதருவார்கள். இதனால் அவ்வாறான நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பண்டித்தளச்சி அம்மன் ஆலயத்தின் திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஓரிரு நாட்களில் முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post