செவ்வாய்க்கிழமை வரை வடக்கில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு - வெளி மாவட்டங்கள் செல்வதற்கும் தடை - Yarl Voice செவ்வாய்க்கிழமை வரை வடக்கில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு - வெளி மாவட்டங்கள் செல்வதற்கும் தடை - Yarl Voice

செவ்வாய்க்கிழமை வரை வடக்கில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு - வெளி மாவட்டங்கள் செல்வதற்கும் தடை

வடக்கு மகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை அமுல்ப்படுத்தப்பட உள்ளது.

ஆயினும் அன்றையதினம் 6 மணியில் இருந்து 2 மணிவரை தளர்த்தப்படடும் ஊரடங்குச் சட்டம் அன்றையதினமே மீண்டும் 2 மணிமுதல் அமுல்ப்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்திவு மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களிலெயே இருக்குமாறும் வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றுக்குள்ளாகியதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலையே வடக்கு மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post