இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
யாழ் போதனா வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் வைத்திய சேவைக்காக காத்திருப்பவர்கள் வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
இதனடிப்படையில் யாழ் போதனா வைத்தியசாலையிலே கிளினிக் மருந்துகளை வழமை போன்று விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதானால் அவர்கள் வெளியில் வர முடியாத நிலைமை காணப்படுவதானால் சில மருந்துகளை நாங்கள் அந்ததந்தப் பகுதி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம்.
இங்கே வரக் கூடியவர்கள் நெரிசல் இன்றி மருந்துகளை பகல் பொழுதில் பெற்றுச் செல்ல முடியும். குறிப்பாக கடுமையான வியாதியுள்ளவர்கள் அந்த வியாதிகளைக் கட்டுப்படுத்தவதற்கான மருந்துகளை கட்டாயம் அவர்கள் பாவிக்க வேண்டும்.
குறிப்பாக சலரோகம் உயர் குருதி அமுக்கம். வலிப்பு போன்ற வருத்தங்களில் இருப்பவர்கள் கட்டாயம் மருந்தை தவறாது எடுக்க வேண்டும். கடுமையான வியாதியுடையவர்கள் இந்த மருந்தை பெற்றுச் செல்ல முடியாத நிலைமை காணப்படும்
ஆகவே அவர்கள் வீட்டிலே இருக்கின்ற சுகதேகி ஒருவரை அனுப்பி இந்த மருந்துகளைப் பெற்று வழங்குவதற்கும் ஆவண செய்திருக்கின்றோம். இது போதனா வைத்தியசாலை மாத்திரமல்ல இந்தப் பிராந்தியத்திலே காணப்படுகின்ற ஏனைய வைத்தியசாலைகளிலும் இந்தச் சிகிச்சை முறையை செய்வார்கள் என நம்புகின்றேன். ஆகவே ஏனைய கடுமையான வியாதிகள் குறித்தும் விழிப்புணர்வாக இருந்து கொள்ள வேண்டும்.
Post a Comment