இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு - சுகாதார சேவைகள் திணைக்களம் - Yarl Voice இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு - சுகாதார சேவைகள் திணைக்களம் - Yarl Voice

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு - சுகாதார சேவைகள் திணைக்களம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள இலங்கையர்களில் மூவருக்குக் கொரோனா ​தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதென சுகாதாரச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களில் ஒருவருக்கு 41 வயதென்றும் இவர் அண்மையில் ஜேர்மன் நாட்டுக்குச் சென்று திரும்பியவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தற்போத கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரென சுகாதாரச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை 37 வயதுடைய இன்னொருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர் இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும் மட்டக்களப்பு - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்படும் மய்யத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்றும் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் தற்போதுஇ பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

43 வயதுடைய மற்றைய கொரோனா நோயாளியும் கந்தக்காடு மய்யத்திலிருந்தவர் என்றும் அவர் தற்போது கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த ஜாசிங்f இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதென்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post