தேர்தலில் ஒரு ஆசனம் என்றால் ஒதுங்குவேன், எல்லாவற்றுக்கும் நான் இணங்குவதில்லை - டக்ளஸ் - Yarl Voice தேர்தலில் ஒரு ஆசனம் என்றால் ஒதுங்குவேன், எல்லாவற்றுக்கும் நான் இணங்குவதில்லை - டக்ளஸ் - Yarl Voice

தேர்தலில் ஒரு ஆசனம் என்றால் ஒதுங்குவேன், எல்லாவற்றுக்கும் நான் இணங்குவதில்லை - டக்ளஸ்

ஐனாதிபதி, பிரதமர் உட்பட தெற்கு அரசியல்வாதிகள் தேர்தல் காரணமாக ஏதும் பேசலாம். அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் கூறுகின்ற எல்லாத்திற்கும் நானும் இணங்குகின்றேன் என்றுமில்லை எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா நடைபெறவிருக்கும் தேர்தலில் தனக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அரசியலில் இருந்து தான் ஒதுங்குவேன் என்றார்.

தமிழ்த் தலைமைகள் இழைத்த தவறே இன்றைய நிலைமைக்கு காரணமெனக் குற்றஞ்சாட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா வரவிருக்கும் சந்தர்ப்பத்தில்; ஆற்றல் உள்ள அக்கறையுள்ள பொறிமுறையுள்ள தேசிய பலமான நல்லிணக்கம் உள்ளவர்களுடன் அனிதிரண்டு அவர்களை பல்ப்படுத்துவதனூடாக நிச்சயமாக ஓரிரண்டு வருடங்களுக்கு நிங்கள் எதிர்கொள்ளும் அரசியல் உரிமை அபிவிருத்தி அன்றாட பிரச்சனைகைள விரைவாக இலகுவாக தீர்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி கட்டத் திறப்பு விழா நிகழ்வு இன்று சனிக்கிழமை பனைதென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தெல்லிப்பழை தலைவர் நா.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

பனை அபிவிருத்திச் சபையின் பிரச்சனைகள் தொடர்பாக எனனிடம் முறைப்பாடு செய்கின்ற போதெல்லாம் என்னுடைய கடமையாக நினைத்து அந்தப் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருக்கின்றேன். ஆகையினால் இங்குள்ளவர்களின் பிரச்சனைகள் தேவைகளை நானறிவென். ஆவற்றைத் தீர்த்து வைக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பேன்.

புனர்வாழ்வு அமைச்சு தொடர்பில் கூட்டமைப்பைச் சேர்ந்த சுகிர்தன் சொல்லியிருந்தார். ஆனால் இன்னொரு கட்சியைச் சேர்ந்தவரை வைத்துக் கொண்டு அரசியல் கருத்தைச் செல்வது சரியாக இருக்காது. அவருடைய மனதைப் புன்னாக்காமல் என்னுடைய அனுபவத்தை நான் சொல்கிறேன்.

அதாவது ஆயுதப் போராட்டத்தில் 30 வருசமும்.; தேசிய அரசியல் நீரோட்டத்தில் 30 வருச அனுபவமும் எனக்கிருக்கிறது. போராட்ட காலத்திலும் அரசியலிற்கு வந்த பின்னரும் றபர் செருப்புடன் தான் நான் இருக்கிறேன். ஏனெனில் எமது மக்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பது தான் என்னுடைய எண்ணமே தவிர வேறேதும் இல்லை.

சேர் பொன் இராமநாதன் தொடக்கம் இன்னுறுவரை இருக்கும் தமிழ் தலைமைகள் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளனர். அவர்கள் தவறிழைத்துள்ளனர். அந்த அனுபவ ரீதியான ஆதங்க வெளிப்பாடு தான் என்னுடைய கருத்துக்கள் அமைகின்றன. அதனைவிடுத்து சகட்டு மேனிக்கு விமர்சிக்க வேண்டுமென்ற எண்;னம் ஏதும் எனக்கு கிடையாது.

கடந்த காலத்தில் எதைச் சொன்னேனோ அதையே இன்றும் சொல்கிறேன். குறிப்பாக அரசியல் தீர்வாக மாகாண சபை தான் ஆரம்பமாக இருக்குமென்று சொன்னேன். ஆனால் அது முடிவல்ல என்றும் கூறுகிறேன். அன்று இதை நான் கூறிய போது சக இயக்ககங்களும் கட்சிகளும் இதை எதிர்த்த்து என்ககு எதிராக கருத்து சொன்னார்கள்;. ஆனால் அன்று நான் சொன்னது தான் இன்று நடக்கிறது.

ஆகவே மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். வர இருக்கும் தேர்தலில் எனக்கு கனிசமான வாக்கும் ஆசனமும் கிடைத்தால் தொடர்ந்தும் அரசியலில் இருப்பேன் இல்லாவிட்டால் அரசியலில் இருக்க மாட்டேன் என்று என்னை சந்தித்தவர்களிடம் நான் கூறியிருக்கின்றேன்.

ஒரு காலத்தில் ஆயுதம் தூக்கினோம். ஆனால் அந்த ஆயுதப் போராட்ட காலத்தில் போராட்ட இயக்கங்களுக்குள் உள்ளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளால் போராட்டம் திசை திரும்பியது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்று ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்கலாம்.

இது எல்லாம் அனுபவம். தென்னிலங்கை அரசோ இந்திய அரசோ தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து தான் பிரச்சனைகளைப் பார்பபார்கள். ஆகையினால் நாங்கள் தான் எங்கள் பிரச்சனைகளை எங்களது நிலைப்பாட்டிலிருந்து அனுக வேண்டும்.

ஆகவே இன்றைய இந்த நிலைமைக்கு தமிழ் தலைமைகள் தான் காரணம். ஆதற்காக காழ்ப்புணர்ச்சி அல்லது போட்டி காரணமாக என்னுடைய கருத்தை நான் முன்வைக்கவில்லை. அனுபவத்தினூடாகவே என்னுடைய கருத்தை நான் சொல்கிறென்.

எமது மக்கள் எதிர்நொக்கும் அபிவிருத்தி அரசியல் அன்னறாட பிரச்சனைகளை தீர்க்க பொறிமுறை என்னிடம் உள்ளது. கடந்த காலத்தில் அதைச் செய்து வந்திருக்கிறேன். தேசிய நல்லிணக்கத்தீனூடாகத் தான் பிரச்சனைக்கு தீர:வு அடையலாம்.

இன்று ஆட்சியில் இருக்கிறவர்கள் தான் எதிர்வரும் ஐந்து வருடத்திற்கு ஆட்சியை தொடர போகின்றனர். அதனால் தான் கடந்த தேர்தலில் கோட்டா வெல்ல போறார் அந்த வெற்றியில் பங்கெடுப்பதனுர்hக பிரச்சனைகளுக்கு தீர:வு காணாலாம் என்று சொன்னேன். ஆனால் துரதிஸ்ரவசமாக மக்களிடம் அது போகவில்லை.

25 வருடமாக நான் பாராளுமன்றில் இருக்கிறேன். பாராளுமன்ற மூத்த உறுப்பினர நான் தான்;. ஆனால் வயது சிலருக்கு ஒரு சில கூட இருக்கலாம். சில வேளை வரவிருக்கும் நடாளுமன்றில் நான் வரலாம். ஆனால் ஒரு உறுப்பினராக வருவதில் எனக்கு விருப்பமில்லை. அவ்வாறு வந்தால் நான் ஒதுங்கி வேறு ஒருவரை செயற்பட வைப்பேன்.

எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கலாம் தீர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது .செய்யலாம் செய்வேன். ஆகவே வரவிருக்கும் சந்தர்ப்பத்தில் நீங்கள் ஆற்றல் உள்ள அக்கறையுள்ள பொறிமுறையுள்ள தேசிய பலமான நல்லிணக்கம் உள்ளவர்களுடன் அனிதிரண்டு அவர்களை பல்ப்படுத்துவதனூடாக நிச்சயமாக ஓரிரண்டு வருடங்களுக்கு நிங்கள் எதிர்கொள்ளும் அரசியல் உரிமை அபிவிருத்தி அன்றாட பிரச்சனைகைள விரைவாக இலகுவாக தீர்ப்பேன்.

தேர்தல் காரணமாக ஐனாதிபதியோ பிரதமர் அவர்களோ தென்னிலங்கை அரசியல்வாதிகளேர் ஏதும் பேசலாம். அததைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் கருத்துக்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம் இல்லை. மக்கள் ஆதரவு இருக்க வேண்டும். அப்படி ஆதரவு இருந்தால் மக்களுக்காக என்னாலானதைச் செய்வேன். மன வைராக்கியத்துடன் தான் சொல்லி வருகிறேன். இதையே கடந்த காலத்திலும் சொன்னேன் என்றார்.

இந் நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், பனைதென்னை வள கூட்டுறவுச் சங்க அதிகாரிகள், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் அங்கத்தவர்கள் மற்றும் கிராமிய வங்கியில் அதிக சேமிப்பை மேற்கொண்டவர்கள் மற்றும் சங்கத்தின் நிண்ட காலப் பணியாளர்கள் எனப் பலரும் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post