எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அடிகளார் மேற்கண்டவாறு தெரிவித்தார்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக தமது வாக்குப் பலத்தை நிரூபிக்க வேண்டும் அனைவரும் வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அடிகளார் தமிழ் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலமே தமிழர்களின் இருப்பினை நிரூபிக்க முடியும்.
தற்பொழுது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில் பல கட்சிகள் முளைக்கின்ற விடயத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது
அத்தோடு யுத்தம் முடிந்த பின்னர் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி சிங்கள மயமாக்கலை மேற்கொண்டு வந்த அரசாங்கத்தினை மாற்றும் முகமாகவே நாம் நல்லாட்சியை கொண்டு வந்தோம்.
எனினும் மீண்டும் பழைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துவிட்டது எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே தமது இருப்பினை தக்கவைக்க முடியும்.
தற்போது புதிய புதிய கட்சிகள் முளைக்கின்றன ஏன் அவர்கள் இவ்வாறு புதிய புதிய கட்சிகளை உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை என்ன காரணத்திற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு போவதாக இருந்தால் அதற்கு ஒரு காரணம் வேண்டும் சரியான காரணமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் இங்கே என்ன காரணம் என்று கூட தெரியாமல் தான் புதிய கட்சிகள் முளைக்கின்றன.
எனவே எதிர்வரும் தேர்தலின் போது தமிழ் மக்கள் தகுதியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு தமது வாக்கு பலத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Post a Comment