நானும் தமிழ்த் தேசிய வாதி தான், தேர்தலில் ஏன் களமிறங்குகிறேன் - அங்கஐன் விளக்கம் - Yarl Voice நானும் தமிழ்த் தேசிய வாதி தான், தேர்தலில் ஏன் களமிறங்குகிறேன் - அங்கஐன் விளக்கம் - Yarl Voice

நானும் தமிழ்த் தேசிய வாதி தான், தேர்தலில் ஏன் களமிறங்குகிறேன் - அங்கஐன் விளக்கம்

தமிழ்த் தேசியத்திற்கு நான் எதிரானவன் இல்லை. நானும் தமிழ்த் தேசியவாதி தான். தேர்தல் காலங்களில் உசுப்பேத்தும் தமிழ்க் கட்சிகளின் ஏமாற்று வேலையை தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளதால் எமக்கான ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் இம்முறை தேர்தலில் களமிறங்குகிறேன்.

இவ்வாறு அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்  தெரிவித்துள்ளதாவது..

தமிழ் மக்களுக்கு இதுவொரு முக்கியமான தேர்தலாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் அமைகிறது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடமாகியும் நாங்கள் எங்கள் இருப்பைத் தக்க வைப்பதற்கு மிகவும் கஸ்ரப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.

அதாவது கல்வியிலும் அபிவிருத்தியிலும் சரி பொருளாதாரமாக விவசாயமாக இருக்கட்டும் என அனைத்து துறைகளிலும் மற்ற மாவட்டங்களுடன் எங்களது மாவட்டத்தை ஒப்பிடுகின்ற போது எவ்வளவோ இடைவெளி உள்ளது. ஆகவே நாங்கள் அந்த இடைவெளியை நிரப்பாமல் விட்டால் அது பாதிப்பையே ஏற்படுத்தும் .

இன்றைக்கிருக்கிற பாதிப்பு என்னவென்றால் ஒரு பக்கம் கலாச்சார சீரழிவு மறு பக்கம் ஆவாக்குழு என்று அதே நேரம் எமது பிரதேசங்களை விட்டுவிட்டு இளைய சமூகம் வேலை வாய்ப்பு என்று வேறு இடம் தேடிச் செல்கிறது.
அதே நேரத்தில் தற்கொலைகளும யாழ்ப்பாணத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அப்படி எங்களுடைய இருப்பு ஒரு பக்கமாக குறைவடைந்து செல்கிறது. ஆகவே இந்த தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். எங்களது இருப்பைத் தக்க வைக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டிய கால கட்டமாக இதை நான் பார்க்கிறேன்.

இந்த அரசியலுக்கு நான் வந்து பத்து வருடமாகிவிட்டது. முதல் தேர்தலே பாராளுமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலுக்கு வரும் போது அரசியலில் புதுசாக மக்களிடம் சென்றேன். அதன் பின் மாகாண சபைத் தேர்தலில் மாகாண சபைக்கு மக்களால் அனுப்பட்டேன். அடுத்த கட்டமாக பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு சொற்ப வாக்குகளில் நான் தவறினாலும் தேசியப் பட்டியல் ஊடாக நான் வந்திருந்தேன்.

ஆவ்வாறு வந்து மக்களுக்கு சேவை செய்யக் கூடிய மிகப் பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதாவது மக்கள் தெரீவு செய்யாமல் தேசியப் பட்டியலூடாக வந்து மக்களுக்கு என்னால் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறதென்றால் மக்களுக்கு நான் என்னை அர்ப்பணித்தே சேவை செய்தேன்.

ஆகையினால் இத் தேர்தலில் மக்கள் என்னைத் தெரிவு செய்து மக்களின் அங்கீகாரத்தை நான் பெற வே;ண்டுமென்பது தான் என்னுடைய நிலைப்பாடாக இருக்கிறது. அவ்வாறு மக்களின் அங்கீகாரத்தை எடுத்துக் கொண்டு என்னுடைய வேலையை இன்னும் வேகமாகவும் விரைவாகவும் செய்வதற்கு எண்ணியுள்ளேன்.

இப்போது நான் மாவட்ட அபிவிருத்தி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் இல்லாதவர்களும் மாவட்ட அபிவிருத்தி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே நான் பாரர்ளுமன்ற உறுப்பினராக இருந்தால் தான் மாவட்ட அபிவிருத்தியை இன்னமும் வலுப்படுத்தி இந்த மாவட்டத்திற்கும் மக்களுக்கும் இன்னும் சேவை செய்ய முடியுமெனக் கருதுகிறேன்.

அதுவும்; ஐந்து வருடம் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த மாவட்டத்தினதும் மக்களதும் தேவை என்ன என்பதை அறிந்துள்ளேன். ஏனெனில் மாவட்ட அபிவிருத்தி தலைவராக செயற்பட்டு வருகின்றோன். ஆகையினால் எங்கிருந்து நிதிகளைக் கொண்டு வர வேண்டுமென நான் அறிந்திருக்கிறேன்.

ஆகவே வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மக்களின் அங்கீகாரத்துடன் வந்து மாவட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து யாழ் மாவட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களடன் ஒப்பிடுகின்ற போது இருக்கின்ற அபிவிருத்தி இடைவெளியை நாங்கள் நிரப்பாவிட்டால் எங்களது இருப்பு மிகப் பெரிய அளிவில் கேள்விக்குறியாகும். ஆகையினால் நாங்கள் ஒரு வலுவான கூட்டணியில் துறைசார்ந்த நிபுணர்கள் என அனைவருமாக சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறோம்.

அவ்வாறாயின் நான் முன்னரே சொன்னது போல எதிர்வரும் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுகிறேன். அதுவும் எமது கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அக் கட்சியின் கைச் சின்னத்தில் இத் தேர்தலில் போட்டியிட இருக்கிறேன்.

கடந்த பத்து வருசம் யாழ் மாவட்ட மக்களுடன் நாங்கள் இருந்திருக்கிறோம். மக்களின் கிராமங்களுக்கு சென்று மக்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறோம். அதிலும் கடந்த ஐந்து வருசம் இன்னுமும் மக்களிற்கு அருகில் சென்று சேவையாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
அதே நேரம் மக்கள் எங்களுடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில் யாழ்ப்பாண மக்களுக்கு புதிதாக இல்லாத சின்னமாகவும் மக்கள் ஆதரித்து ஏற்றுக் கொள்கின்ற சின்னமாகவும் இருக்கின்ற கைச் சின்னத்தில் களமிறங்க இருக்கிறோம்.

அதே நேரத்தில் கடந்த காலத்தில் கைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்ட போது மக்கள் எமக்கு வரவேற்பைத் தந்திருக்கிறார்கள். அதே போல சிறிமாவோ அம்மையார் காலத்திலும் அதே வரவேற்பை கொடுத்திந்திருக்கிறார்கள். ஆகவே கைச் சின்னத்தில் இந்தத் தேர்தலை எதிர் கொள்ளலாமென்று விரும்புகின்றோம்.

ஆகையினால் சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்ற போது கட்சிக்கு அப்பாற்பட்டு போட்டியிடும் ஒரு ஊடகமாகவே பார்க்கிறோம். இதனூடாகச் சென்று மக்களுக்கு நல்லதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைத் தான் நாங்கள் கொண்டு வரப் பார்க்கின்றோம். அதாவது துறைசார்ந்து செற்படக் கூடிவர்களை நிறுத்தி மக்களுக்கானதைச் செய்யலாம் என்றே எதிர்பார்க்கிறேன்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இருந்தும் செயற்டுகின்றன. அதே போல பிரிந்து நின்றும். செயற்படுகின்றன. மேலும் தெற்கு அரசியல் கட்சிகளிலும் பிரிந்து பிரிந்து தேர்தலைக் கேட்கிறார்கள். ஆகவே நாங்களும் எமது கட்சியில் இத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றோம்.

எமது கட்சி அரசாங்கத்துடன் இண்க்கம் என்றதற்கு மேலாக அவர்களுடன் பேசி தான் எமது அபிவிருத்தியை இலக்கை அடைய முடியுமென்று கருதுகிறேன். ஆவ்வாறான நிலைப்பாட்டிலேயே மக்களும் இருப்பதால் நாங்கள் நம்பிக்கையுடன் தேர்தலில் களமிறங்குகின்றோம்.

இன்றைக்கு எங்களிடம் பலர் பலதையும் கேட்கின்றனர். அதாவது கட்சிகள் பலவும் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிடுவதால் பலர் வாக்கை வீணாக்கப் போகின்றனர் என்று கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் வாக்கை வீணாக்கப் போவதில்லை. நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.

ஏனெனில் எமது மக்களுக்கு நாங்கள் செய்த வேலைகள் திட்டங்களின் அடிப்படையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். ஆகவே மக்கள் எங்களைத் தேடி வருகின்றனர். நாங்களும் மக்களுக்காகவே செயற்படுகின்றொம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் எங்களுக்கு வாக்களிக்குமாறு கோருகின்றதுடன் எமக்கு முழுமையான ஆதரவை மக்கள் வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கின்றோம்.

மேலும் இன்றைக்கு வாக்குகள் சிதறிப் போனாலும் மக்கள் ஆதரவுடன் கணிசமான வாக்குகளை எடுக்கக் கூடிய எந்த ஒரு கட்சிக்கும் வாய்ப்பு என்பது அமையுமென நிச்சயமாக நான் நம்புகிறேன். ஆகையினால் எங்களுக்கான சந்தர்ப்பம் இருக்கின்ற போது அதனை எடுத்துக் கொள்வதற்கான வகையில் நாங்கள் செயற்படுவோம்.

தேசிய கட்சியொன்றில் இருந்தாலும் நான் எப்போதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவன் அல்ல. தமிழ் மக்களுக்கு தீர்வை யார் பெற்றுத் தருவார்கள் என்றாலும் அவர்களுடன் நிற்பதற்கு நாங்கள் தயார். அப்படி தான் நல்லாட்சி அரசாங்கத்தில் தேவையான நேரத்தில எங்களது ஆதரவைக் கொடுத்திருந்தோம்.

எங்களுடைய தீர்வை அனுபவிப்பதற்கு நாங்கள இருக்க வேண்டும். அதற்கு எங்களது இருப்பை தக்க வைக்க வேண்டும். இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வை நோக்கி நாங்கள் பயணிக்க வேண்டும். அவ்வாறு நாங்கள் சொல்லி வருகின்ற இதனைத் தான் இன்றைக்கு பலரும் சொல்லி வருகின்றனர்.

எமது மக்களுடைய பிரச்சனைகள் தேவைகள் அறிந்து அதனை நிறைவேற்றிக் கொள்ளவதற்காகவே நாங்கள் செயற்படுகிறோம். அந்த வகையில் நானும் ஒரு தமிழ் தேசிய வாதி தான். ஆகவே எமது இருப்பை தக்க வைத்தால் தான் இலக்கை அடைய முடியும். அதனடிப்படையில் எங்களது இருப்பைத் தக்க வைத்து இலக்கை நோக்கி பயணிப்பதற்கான ஒரு செயற்பாட்டாளராக நான் இருக்கிறேன்.

எங்களுடைய இருப்பை தக்க வைப்பதற்கு தேவையான அந்த அபிவிருத்தி இடைவெளியை நிரப்பி எங்களுடைய அரசியல் அபிலாசைகளை நோக்கி பயணிப்பது என்னுடைய நோக்கம். அது அரசியல் அதிகாரப் பரவலாக்கமூடாகவும் இருக்கலாம். ஆகவே தமிழ் மக்களுக்காகவே நாமம் செயற்படுவதால் நாங்களும் தமிழ்த் தேசியவாதி தான்.

இது ஒரு கட்சி என்பதை விட இதை ஒரு ஊடகமாகவே பார்க்கிறேன். ஆகவே நான் எங்கிருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று பார்க்கிறனே ஒழிய அரசாங்க கட்சி என்பது சுதந்திரக் கட்சியல்ல. பிரதானமான கட்சி சிறிலங்கா பொதுஐன பெரமுன. அதனுடைய ஒரு கூட்டணியாகத் தான் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது ஒரு கட்சி என்பதை விட இதை ஒரு ஊடகமாகவே பார்க்கிறேன். ஆகவே நான் எங்கிருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று பார்க்கிறனே ஒழிய அரசாங்க கட்சி என்பது சுதந்திரக் கட்சியல்ல. பிரதானமான கட்சி சிறிலங்கா பொதுஐன பெரமுன. அதனுடைய ஒரு கூட்டணியாகத் தான் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே இந்த அரசாங்கத்திலும் சுதந்திரக் கட்சியிலும் சிறிலங்கா சுதந்திர பொதுஐன பெரமுனவிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அந்தக் கட்சிகளையோ அல்லது பெரும்பான்மைக் கட்சிகளையோ நான் மக்கள் மத்தியில் பிரநிதித்துவப்படுத்தவில்லை. நான் எங்கிருந்தாலும் எமது மக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அது தான் இதில் இருக்கின்ற வித்தியாசம்.

டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் எப்படி ஒரு கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்தில் இணைந்து தமிழ் மக்களுக்காகச் செயற்படுவாரோ அதே போலத் தான் நானும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் கேட்டு வெற்றி பெற்று அரசங்கத்தில் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் அபிலாசைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். என்னால் முடிந்ததைச் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு நான் தமிழ் மக்களுக்காகச் செயற்படுகின்ற போது தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். இதுவரையும் அவ்வாறே ஆதரித்து வந்த தமிழ் மக்கள் இனியும் தொடர்ந்தும் அந்த ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆகவே எல்லாரும் பெரமுனவில் இணைந்து செல்கின்றனர் என்பதற்காக நானும் இணைந்து போக வேண்டுமென்ற தேவையில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் பலரும் அந்தக் கட்சியில் இங்கு இணைந்து கொள்ளாமல் வேறு கட்சிகளில் போட்டியிடுகின்ற நிலைமையில் நானும் எனது கட்சியில் போட்டியிடுகிறேன்.

சுதந்திரக் கட்சியில் நான் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வியுற்றாலும் தேசியப்பட்டியல் கிடைக்குமென்று பலரும் சொல்லியிருந்தனர். இந்த முறை எனக்கு ஒரு தேசியப் பட்டியலும் வேண்டாம். நான் மக்களால் அங்கீகாரம் பெற்ற பாராமன்ற உறுப்பினராக தெரீவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு சென்றால் தான் என்னுடைய வேலைத் திட்டத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அந்த அடிப்படையில் எங்களது கட்சியில் நான் யாழில் போட்டியிடுகிறேன்.

கடந்த தேர்தலில் மொட்டுக்கு ஆதரவாக இருந்த கட்சியினர் இன்றைக்கு தங்கள் தங்கள் கட்சியில் கேட்கின்ற பொழுது அதனடிப்படையில் நான் முதலாவதாக அங்கத்தவம் பெற்ற சுதந்திரக் கட்சியில் தற்போதும் இருப்பதால் அதில் போட்டியிட்டு வெற்றி பெற எண்ணியிருக்கின்றேன்.

அவ்வாறு வெற்றி பெற்றதனூடாக அவர்களுடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை செய்வது தான் சரியாக இருக்குமென்று கருதுகிறேன். ஆகவே தேசியப் பட்டியல் இல்லமல் மக்களை நம்பியே களமிறங்குகின்றோம். சுதந்திரக் கட்சி என்ற ஊடகத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்று எமது மக்களுக்கு தேவையான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை செய்வது தான் என்னுடைய நோக்கம்.

பொதுஐன பெரமுனனோ அல்லது சுதந்திரக் கட்சியோ எந்தக் கட்சியிலும் வெற்றி பெறலாம். எதிலும் பெற்றி பெற முடியாது என்று நான் பார்க்கவில்லை. அரசில் இணைந்திருக்கிற எல்லோருமாகச் சேர்ந்தால் மொட்டுக்; கட்சியில் களமிறங்கலாம். ஆனால் அரசில் இணைந்திருக்கிற பல கட்சிகிளும் தனி தனியாக தேர்தல் கேட்பதற்கு விருப்பத்தை தெரிவிக்கின்ற பொழுது நாங்களும் எங்களது கட்சியில் தனியே களமிறங்குவது தான் பொருத்தமானதாக இருக்கும்;.

அது தான் சுதந்திரமானாதாகவும் இருக்குமென்று கருதுகின்றேன். நான் கை சின்னத்தில் கேட்பது தமிழ் மக்களுக்கான சேவையை அரசாங்கத்துடன் இணைந்து செய்யக் கூடியதாக இருக்குமென்று நம்புகிறேன்.

உதாரணமாக டக்ளஸ் தேசவானந்தா மற்றும் வரதவராஐப் பெருமாள் ஆகியோர் அரசாங்கத்துடன் இருந்து தனிக் கட்சியில் கேட்டு அரசுடன் இணைந்து செயற்பட இருக்கிறார்களோ அதே போல நானும் எனது கட்சியில் கேட்டு வெற்றி பெற்று அரசுடன் இணைந்து செயற்படலாமென்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு நான் செல்கின்ற போது பலமான அழுத்தத்தையும் கொடுக்கலாமென்று நான் நம்புகிறேன்.

அதனுர்டாகவே தமிழ் மக்களுடைய தேவைகள் குறித்து வலுவாக அழுத்தம் கொடுக்க முடியுமென்று நான் நினைக்கிறேன். எங்கள் சின்னத்தில் தெரிவு செ;யயப்படுகிற பொழுது தமிழ் மக்களின் தேவைகள் குறித்து அதிக அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமென்று நினைக்கிறேன்.

ஆகவே தேர்தல்கள் வருகின்றபோது காலம் காலமாக குறிப்பாக கடந்த 70 வருசம் சொல்லுகிற ஒரே விசத்தை ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் கொண்டு வந்து தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை உசுப்பேத்துகிற செயற்பாட்டை தமிழ்க் கட்சித் தலைமைகள் செய்யக் கூடாது என்று கேட்கிறேன்.

ஆனால் தேர்தல்கால உசுப்பேத்தல்கள் எல்லாவற்றையும் மக்கள் நன்றாக புரிந்துள்ளனர். ஆகையினால் இப்ப மக்களும் தெளிவாக இருக்கின்றனர் என்று நான் நம்புகிறேன். 2010 இலும் இதே அங்கீகாரத்தைக் கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. 2015 இல் அரசாங்கத்தைக் கொண்டு வந்தும் எதவும் நடக்கவில்லை. ஆகவே இவற்றையெல்லாம் உணர்ந்து மக்கள் தெளிவாக முடிவெடுக்க வேண்டுமென்று கேட்கின்றோம்.

எங்களது இருப்பைத் தக்க வைக்க வேண்டுமென்றால் எங்களுக்கு  அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அது கல்வி விவசாளம் பொருளதாரம் என எதுவுhக இருந்தாலும் நாங்கள் எங்களிடமுள்ள அபிவிருத்தி இடைவெளியை நிரப்ப வேண்டும். அதனைச் செய்யாமல் விட்டால் இருப்பு இல்லாமல் போய்விடும். இருப்பு இல்லாமல் போனால் தீர்வை யார் எப்ப எடுத்துத் தந்தாலும் அந்தத் தீர்வை அனுபவிக்கப் போகிறவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே நாங்கள் இந்த நேரம் எங்கள் இருப்பை தக்க வைக்கக் கூடிய இருப்பை உறுதி செய்யக் கூடிய வகையில் செயற்பட வேண்டும். இன்றைக்கு சகல தமிழ் கட்சிகளும் ஒரே விடயத்தை தான் பேசுகின்றனர். வேறு வேறு விதமாக பேசுகின்றனர். அதனால் ஒருதரையொருதர் குறை சொல்கின்றனரே ஒழிய அவர்கள் ஒருதரிடமும் தீர்வில்லை. முற்போக்கான அரசியல் சிந்தனை அவர்களிடம் இல்லை.

எல்லாருமே இருக்கிறதை பற்றி பேசுவதில்லை. நீண்டகாலப் திட்டம் வைத்துள்ளனரே தவிர குறுகிய காலத் திட்டம் இல்லை. அதனை எவ்வாறு நகர்த்துவது என்ற திட்டமும் இல்லை. அதை இளைஞர்களாக இருக்கட்டும் மக்களாக இருக்கட்டும் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இங்கு வேலையில்லாமல் இருக்கின்றனர் வீதிகள் இல்லை. பொருளாதாரம் குறைவாக உள்ளது. குடும்பங்கள் நடத்த முடியாமல் இருக்கிறது. இவ்வாறு எங்கள் இருப்பை அழிக்கக் கூடிய சகல விடயங்களும்; நடந்து கொண்டிருக்கிறது

நீண்டகாலப் திட்டத்தை வைத்துக் கொண்டு தற்கால இருப்பை அழிக்கும் இந்த நடவடிக்கைகளை தொடர விட்டால் இருப்பு அழிந்து விடும். ஆகவே நான் மக்களுக்கு கூறுவது இனியுமு; இப்படியானவர்களை நம்பி ஏமாறாது சிந்திக்க வேண்டும் என்று தான். ஆனால் எங்களது உடனடித் தேவை என்ன அடுத்த தேவை என்ன என்பதை சிந்திக்க மக்கள் தாராகி விட்டார்கள். அதாவது எங்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைய வேண்டியது நிச்சயமானது உறுதியானது. அது முழுமையான இலக்காக இருக்க வேண்டும்.

அது இன்றைக்கு நாளைக்கு அல்லது அடுத்த தீபாவளி அல்லது பொங்கலுக்கு தீர்வு வருமென்று சொல்ல விரும்பவில்லை. அப்படி தானே ஒவ்வொரு தீபாவழி பொங்கல் என பார்த்து ஏமாத்தப்பட்டனர். இன்றைக்கு கடந்த அரசாங்கம் பிரதமரும் ஏமாற்றி விட்டது என்று கூறி கூட்டமைப்பினர் தங்களது கைகளைச் சுத்தப்படுத்தப் பார்க்கிறார்கள்.

ஆனால் அதனை எந்தளவிற்கு மக்கள் நம்புவார்கள் என்றில்லை. ஆனால் இவர்கள் தான் எழும்ப முடியாமல் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். இங்கு மக்கள் பிரச்சனைகள் எல்லையைத் தாண்டிச் செல்ல செல்ல கூட நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கூட்டமைப்பினர் தான்.

ஆகையினால் அபிவிருத்தி வேலைத் திடத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்து இருப்பை தக்க வைக்க வேண்டும். அதை யார் செய்யவார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும். அந்த அடிப்படையில் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்கிற வேலைத் திட்டத்தை செயற்படுத்திக் கொண்டிருக்கிறோம.; மக்களும் ஏற்றுக் கொள்கிற வெற்றிக்கான பாதையாக எங்களது பயணத்தை நாங்கள் பார்க்கிறோம்.

மேலும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் தீர்வு என்று சொல்லி ஒரு வார்த்தையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை நான் முடிக்க விருமபவில்லை. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலசைகளை அடைய அனைத்து விதத்திலும் உதவ நான் தயாராக இருக்கிறேன். அதாவது அரியல் அபிலாசைகளை அடைய தான் நாங்கள் அனைவரும் முயற்சிக்கிறோம். ஆனால் அதற்கு திரவு என்று ஒரு சில தரப்பினரும் வேறு வேறு வகையிலும் சொல்கின்றனர்.

இப்ப தமிழ் தரப்பிற்குள் பிரிந்து நிற்கிற மூன்று தமிழ்க் கட்சிகளே அதைக் குறித்தே வேறு வேறு விதமாகச் சொல்கின்றனர். தெளிவின்மையில் தான் மூன்று கட்சிகளும் பிரிந்து போனது காரணமாக இருக்கலாம். தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை தமிழ் தலைவர்கள் புரிந்து கொள்ளாததே பிரிவிற்கு காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அரசியல் அபிலாசைகள் என்பதை அடைவதற்கு அவர்கள் எடுத்த பாதை வேறாக இருக்கலாம் நான் எடுத்த பாதை வேறாக இருக்கலாம். ஆனால் இலக்கு ஒன்று தான்.

அதனை அடைவதற்கு முன்னர் சரி சமமமான அபிவிருத்தியை செய்ய வேண்டும். எங்களுடைய மக்களும் பொருளாதார முன்னேற்றம் வீடு தொழில் என எல்லாம் கிடைத்து இலக்கை நோக்கி அபிலாசைகளை அடைவதற்கான அந்த வேலையை தான் நான் தான் செய்து கொண்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் நான் தான் மிகப் பெரிய தமிழ்த் தேசியவாதி.

ஏனென்றால் எங்களுடைய அடிப்படை பிரச்சனை இருப்பு, அந்த இருப்பைத் தக்க வைத்தால் தான் எந்தவிதமான தீர்வாக இருக்கட்டும் அரசியல் அபிலாசையாக இருக்கட்டும் அதனை அடைய முடியும். அதை அடைவதற்கு சரிசமமான அபிவிருத்தி பொருளாதார முன்னேற்றம் முதலில் ஏற்படுத்தப்பட் வேண்டும்.

வறுமையில் வாடுகிறோம் வீடு இல்லை வேலை இல்லை. அதிலிருந்து மிண்டு வர வேண்டும். மிகவும் கஸ்ரப்பட்ட மக்களே வடக்கில் உள்ளனர். அவர்களை விட்டுவிட்டு ஏனையவர்கள் எதனையும் தீர்மானிக்க முடியாது. ஆகவே அவர்களுடைய வாழ்ககையும் வாழ்வும் முன்னெற்ற வேண்டும்.

அபிவிருத்தியுடன் பொருளாதார ரீதியான முன்னேற்றத்துடன் இருப்பை உறுதுp செய்து இடைவெளியை நிரப்பி அபிலாசைகளைப் பற்றி சிந்திக்க வைக்கும்;. இலக்கை நோக்கிய பயணத்தில் அது மிக மிக முக்கியம்.
ஆவ்வாறு நாங்கள் சொல்லி வருகிற விடயத்தை தான் இன்றைக்கு தமிழ் கட்சிகளும் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

சில வேட்பாளர் அபிவிருத்தியுடன் இணைந்த உரிமைப் போராட்டம் என்று தான் தமது போஸ்ரர்களைம் வெளியிட்டுள்ளனர். ஆகவே அபிவிருத்தி வேண்டுமென்று நாங்கள் கூறுவதை தான் அவர்களும் கூறுகின்றனர். ஆகவே அந்த அபிவிருத்தியை எம்மாலே கொண்டு வர முடியும்.

அதனை நாங்கள் தான் அன்றிலிருந்து கதைத்து வருகிறோம். மக்களின் தேவைப்பாடுகளை அறிய வைத்த உணர வைத்ததது முதலில் நாங்கள் தான். அதற்கேற்ப அவர்கள் தாங்களும் மாறத் தயார் என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர். ஆனால் அவர்கள் மாறினாலும் எதிர்க்கட்சியில் இருந்த கொண்டு மக்களுக்கு அவர்களால் என்ன அபிவிருத்தியை செய்ய முடியும்.

அரசிற்கு எதிராக எதிர்த் தரப்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு தேவiயான அபிவிருத்தி இவர்கள் எவ்வாறு செ;ய்யப் போகிறார்கள்.
இந்த ஐந்து வருசமும் மக்களுக்கு தேவையான விடயத்தை அடையப் போகிறோமா அல்லது இழக்கப் போகிறோமா என்றதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இன்றைக்கு அவர்கள் ஒரு பக்கம் சார்ந்து கடந்த ஐனாதிபதி தேர்தலில் நின்றதால் இந்த அரசுடன் பேசி இணக்கத்தைக் கொண்டு வரவே அவர்களின் செயல் தடையாக இருக்கிறது. ஆகவே அந்தப் பேச்சு வார்த்தையெ அவர்கள் கொண்டு வருவதற்கே நீண்டகால நல்லிணக்க சமிஞ்சைகள் தேவைப்படும்.

ஆகையினால் அது வரைக்கும் தமிழ் மக்களுடைய தேவைப்பாடுகளை பூர்த்திய செய்ய வேண்டுமென்றால் அவர்களுடன் இணைந்து செயற்படக் கூடி நாங்கள் தான் இருக்கிறோம். அதனடிப்படையில் நாங்கள் தெரீவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் இருப்பை உறுதுp செய்து அரசியல் அபிலாசைகளை நோக்கி பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இங்கிருக்கின்றவர்கள் தமிழ்க் கட்சிகள் என்று சொல்வதை விட இவர்களை பிராந்தியக் கட்சிகள் என்று சொல்லலாம் நாங்கள் தேசியக் கட்சி. அதற்காக சிங்களக் கட்சி என்று சொல்லத் தேவையில்லை. அந்தக் கட்சியில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என சகலரும் இருக்கின்றனர். ஆகவே தமிழ் சிங்கள என்ற கட்சி வித்தியாசம் பார்ப்பதால் தான் எதிரப்பு அரசியல் செய்து செய்து எங்களுடைய மக்களுக்கும் எங்கள் பிரதேசங்களுக்கும் மற்றப் பிரதேசங்களுக்கும் மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறோம்.

அந்த இடைவெளியால் தான் எமக்கு பாதிப்பு, அதிலிருந்து மீள வேண்டும். ஆகவே நாங்கள் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசி அதனைத் தீர்த்து வைக்க வேண்டும். நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இல்லை. யாழ்ப்பாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தான் சுதந்திரக் கட்சியில் இருக்கிறேன்.

கட்சியாக இருக்கட்டும் அரசாங்கமாக இருக்கட்டும் நாங்கள் தான் எங்கள் பிரச்சனையை பேச வேண்டிய விடயத்தில் பேச வேண்டுமே ஒழிய எங்களுக்கு மத்தியில் பேசிவிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வை அடைய முடியுமென்று நான் நினைக்கவில்லை. ஆகவே பேச வேண்டிய இடத்தில் பேசி தீர்மானத்தை எடுக்க வேண்டுமானர்ல் தேசிய கட்சியினூடாகப் பேய் அதனைச் செய்வதே இலகுவானதாகவும் நியாயமானதாகவும் இருக்குமென்று கருதுகிறேன்.

இத் தேர்தலில் எங்களது கட்சியை நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்ளுவார்கள். நான் 2010 இல் பாராளுமன்றத்திற்கு வருகின்ற பொழுது 3600 வாக்குகளையே எடுத்தேன். அதற்கு பின் 2013 இல் மாகாண சபைத் தேர்தலில் 10000 இற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு தெரீவு செய்யப்பட்டன். அதன் பின் 2015 ஆம் ஆண்டு பாராளுமுன்றத் தேர்தலில் 17 ஆயிரம் வாக்குகளைப் பெற்றேன். 2018 ஆம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகள் பெற்றோம்.

அதனடிப்படையில் மக்கள் நியாயமாக நேர்மையாக உண்மையாக மக்களுடன் மக்களாக இருந்து வேலை செய்தால் அந்தப் பிரதிநிதியை தான் பார்க்கின்றனர். அவ்வாறு பிரதிநிதியை பார்க்கிறாரக்ளே ஒழிய கட்சியைப் பார்க்கவில்லை. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பல கட்சிகளில் இருந்த பல உறுப்பினர்கள் தெரீவு செய்யப்படலாம்.

அவர்களுடைய தனிப்பட்ட திறமையிலாக இருக்கலமாம். முக்களுக்காக் செயற்பட்ட விதத்தில் மக்கள் உணர்ந்து தெரிவு செய்யலாம். அதனைவிடுத்து வழமை போல ஒரு கட்சியாக மக்கள் செயற்பட மாட்டார்கள். இப்ப புதிய சிந்தனைகள் வருகிறது. புpரச்சனைகளைச் சந்திக்கிறோம். அகவே அதனைத் தீர்க்கவே மக்கள் விருமபுகின்றனர்.

புதிய புதிய பிரச்சனைகள் வருவதால் அதனைத் தீர்த்துக் கொண்டு சமாளிக்க. இன்றைக்கிருக்கின் தமிழ்த் தரப்பினர்கள் மக்களுக்கு என்ன செய்கின்றனர் என்று பார்த்தே தெரீவு செய்வார்கள். வழமையானவர்களுக்கு என்று தெரீவு செய்யப்பட மாட்டார்கள். கட்சி வித்தியாசம் பெரிய விவகாரமாக இருக்காது என்றெ நினைக்கிறென்.

அவ்வாறு நான் தமிழ் மக்களுக்காகச் செயற்படுகின்ற போது தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். இதுவரையும் அவ்வாறே ஆதரித்து வந்த தமிழ் மக்கள் இனியும் தொடர்ந்தும் அந்த ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post