யாழில் வீட்டிலிருந்தே பொருட்களை பெற்றுக் கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு - Yarl Voice யாழில் வீட்டிலிருந்தே பொருட்களை பெற்றுக் கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு - Yarl Voice

யாழில் வீட்டிலிருந்தே பொருட்களை பெற்றுக் கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மக்கள் கடைகளில் முண்டியடிக்காமல் ஊரடங்கு நேரத்திலேயே வீடுகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டை செய்துள்ளதாக யாழ் வணிகர் கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி வீடுகளில் இருந்தபடியே தொலைபேசி வழியாக தேவையான பொருட்களை ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். பொருட்களை பொதுமக்களின் வீடுகளிற்கே சென்று விநியோகிக்கும் 10 வர்த்தக நிலையங்களின் பெயர் தொலைபேசி இலக்கங்களையும் வணிகர் கழகம் வெளியிட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களுடன் பேசிய யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் ஜனக்குமார் உபதலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த வணிகர் கழகத்தின் உப தலைவர் முடிவு செய்யப்பட்டுள்ளதன்படி சாரதி உதவியாளரின் முழு விவரம் மற்றும் கொண்டு செல்லப்படும் பொருட்களின் விவரம் அடங்கிய புதுப் படிவம் ஒன்று இன்று எம்மிடம் தரப்பட்டுள்ளது அந்த படிவத்தை நிரப்பி  யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைத்தால் அவர்கள் பொலிசாரிடமும் இராணுவத்தினரிடமும் ஒப்படைத்து அதற்கான அனுமதி தருவார்கள்.

காலை 9 மணியிலிருந்து 12 மணி படிவங்களை யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கலாம். அன்று பிற்பகல் 4 மணிக்கு அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு பின்னர் விண்ணப்பப் படிவம் ஒப்படைக்கப்படும்.
இடையில் எந்த தங்கு தடையும் இல்லாமல் வாகனங்கள் சென்று வரக்கூடியதாக இந்த நடைமுறையை ஏற்படுத்தியுள்ளோம்.

பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறியின் முன்பக்கத்தில் இது அத்தியாவசிய தேவை என மூன்று மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் லொறியில் ஏற்றப்பட்டிருப்பது உணவுப் பொருளா விவசாய பொருளா கடலுணவா என்பதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மூன்று மொழிகளிலும் எந்த மாவட்டத்திற்கு செல்கிறது என்பதையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

 பயணத்தின் போது இடையில் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் அந்தப் பகுதியி அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு அதனை தெரிவிக்கலாம். அந்த படிவத்தில் இராணுவ சிவில் தொடர்பு அதிகாரி ஒருவருடைய தொலைபேச இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரை தொடர்பு கொள்ளலாம். அல்லது யாழ் வணிகர் கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஊரடங்கு வேளையிலும் அனைத்து மருந்தகங்களும் இயங்கும் விதமாக ஒழுங்கு அமைக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் மருந்து சீட்டுடன் மருந்தகத்திற்கு வந்து மருந்தை பெற்றுக்கொள்ள முடியும். அல்லது முடிந்த மருந்தினுடைய பெட்டியையோ அல்லது ஏனைய பகுதியையோ கொண்டு சென்று உறுதிப்படுத்தலாம். இதை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. உண்மையான தேவையுடையவர் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்திலுள்ள 15 பிரதேச செயலாளர்கள்ளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் பகுதிக்குதேவையான பொருட்களை பட்டியலிட்டு உங்கள் பகுதி பொலிசாரிடம் அனுமதி பெற்று வாகனமொன்றுடன் நகரத்திற்கு வந்தால் நகரிலுள்ள மொத்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து தேவையான நகரிலுள்ள மொத்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து தேவையான பொருட்களை பெற்றுத் தரலாம். ஆஸ்பத்திரி வீதியிலுள்ள மொத்த வர்த்தக நிலையங்களிற்கு எந்த நேரமும் பொருட்களை விநியோகிக்க அனுமதியுண்டு.

வர்த்தகர்கள் அந்தந்த பகுதி பிரதேச செயலாளர் ஊடாக அனுமதி பெற்று வாகனத்துடன் வந்து இந்த மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பு பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் முண்டியடிப்பது நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் ஊரடங்கு நேரத்திலும் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் உணவு பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டப்பட்ட போது பொதுமக்கள் பெருமளவில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். உணவு விநியோகம் செய்வதற்காக நாங்கள் சில ஒழுங்குகளை செய்துள்ளோம்.

யாழ் நகரத்தில் உள்ள எட்டு வரையான மருந்தகங்கள் பத்திற்கும் மேற்பட்ட உணவு பொருட்களை விநியோகிக்கும் கடைகளுடைய தொலைபேசி இலக்கங்களும் அவர்களுடைய முகவரிகளும் ஊடகங்கள் ஊடாக வெளியிட இருக்கிறோம். நீங்கள் வீட்டிலிருந்தே அந்த இலக்கங்களுக்கு தகவல் அனுப்பினால் உங்களுக்கு அந்த பொருட்கள் கிடைக்கக்கூடிய ஒழுங்குகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

அந்தப் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். அந்த தகவல்களை நாங்கள் வழங்க இருக்கிறோம் நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்கும் பட்சத்தில் இந்த நோயிலிருந்து இந்த பிரதேசத்தையும் மக்களையும் பாதுகாக்க கூடியதாக இருக்கும் என்றார்.

வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கிலோமீற்றர் சுற்று வட்டாரத்தில் விநியோக கட்டணம் அறிவிடப்பட மாட்டாது.

யாழ் வைத்தியசாலை- பரமேஸ்வரா சந்தி திருநெல்வெலி தொலைபேசி-0212223533    0773107685

ரட்ணம் பார்மசி- இல.384 ஆஸ்பத்திரி வீதி தொலைபேசி- 0212222667    0773069506     0760586050

சிற்றி மெடிக்கல் கெயார் இல.558 ஆஸ்பத்திரி வீதி தொலைபேசி- 0778511574

ஜெகன் களஞ்சியம்- இல.127இ கண்டி வீதி யாழ்ப்பாணம் தொலைபேசி- 0212225035 - 0774836923

ஜித் பூட் சிட்டி இல.127 கண்டிவீதி யாழ்ப்பாணம் தொலைபேசி- 0212221848

நோர்த் வே பமிலி மார்ட் இல.184 பலாலி வீதி திருநெல்வேலி
தொலைபேசி-0212226002 -  0777647645

சிவன் ஸ்ரோர்ஸ் பரமேஸ்வரா சந்தி திருநெல்வேலி தொலைபேசி- 0212228180 - 0778558761 -  0774329975

ஸ்ரீ பேப்பர் மார்ட் 388 ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம் தொலைபேசி- 0212222409



0/Post a Comment/Comments

Previous Post Next Post