தென்னாபிரிக்க தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா கோலி? - Yarl Voice தென்னாபிரிக்க தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா கோலி? - Yarl Voice

தென்னாபிரிக்க தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா கோலி?

ஒருநாள் போட்டிகளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 133 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதுவரை 239 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி அடுத்த 3 இன்னிங்ஸ்களில் எட்டினால் சச்சின் சாதனையை முறியடிப்பார்.

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை 300 இன்னிங்ஸ்களில் எட்டினார். ஆனால் கோலி தற்போது 239 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை நெருங்கிவிட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 133 ரன்களை கோலி எட்டினால் மிக விரைவாக ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையைப் படைத்து சச்சினை முறியடிப்பார்.

இதற்கு முன் 12 ஆயிரம் ரன்களை மிகவேகமாக எட்டிய வீரர் எனும் சாதனையை சச்சின் மட்டுமே தக்கவைத்திருந்தார். இப்போது அதை கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 12 ஆயிரம் ரன்களை 314 இன்னிங்ஸ்களில் எட்டி 2-வது இடத்திலும் இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா 336 இன்னிங்ஸ்களில் எட்டி 3-வது இடத்திலும் உள்ளனர்.

நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்கத் தொடரில் நிச்சயம் விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடிப்பார் எனத் தெரிகிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post