இலங்கையில் 24 மணிநேரத்தில் 1553 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice இலங்கையில் 24 மணிநேரத்தில் 1553 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

இலங்கையில் 24 மணிநேரத்தில் 1553 பேருக்கு பிசிஆர் பரிசோதனை - சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு


இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 1553 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனில்  ஐயசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனொ ஆய்வுகூடப் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் நாடளாவிய ரீதியாக 16 இடங்களில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகையினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்திற்குள் மாத்திரம் 1553 பேருக்கு இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post