இலங்கையில் ஊரடங்களை மீறிய குற்றச்சாட்டில் 26 830 பேர் கைது - 6845 வாகனங்கள் பறிமுதல் - Yarl Voice இலங்கையில் ஊரடங்களை மீறிய குற்றச்சாட்டில் 26 830 பேர் கைது - 6845 வாகனங்கள் பறிமுதல் - Yarl Voice

இலங்கையில் ஊரடங்களை மீறிய குற்றச்சாட்டில் 26 830 பேர் கைது - 6845 வாகனங்கள் பறிமுதல்

நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 26 ஆயிரத்து 830 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் அவர்களிடமிருந்து 6845 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் இலங்கையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சில இடங்களில் சில மணி நேரங்கள் எடுக்கப்பட்டு மீண்டும் அல்ப்படுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரம் சில இடங்களில் தொடர்ந்தும் தளர்த்தப்படாமல் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றி வருகின்றனர்.

இதனடிப்படையிலையிலையே மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையிான காலப்பகுதியில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டள்ளதுடன் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை புத்தாண்டு தினமான ஊரடங்கை மீறியதாக இன்று காலை முதல் மதியம் வரை மட்டும் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post