ஊரடங்கை மீறியதாக இரண்டு நாட்களில் 50 பேர் கைது - கோப்பாய் பொலிஸார் தெரிவிப்பு - Yarl Voice ஊரடங்கை மீறியதாக இரண்டு நாட்களில் 50 பேர் கைது - கோப்பாய் பொலிஸார் தெரிவிப்பு - Yarl Voice

ஊரடங்கை மீறியதாக இரண்டு நாட்களில் 50 பேர் கைது - கோப்பாய் பொலிஸார் தெரிவிப்பு

கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடினர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதி இன்றி ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post