வடக்கு மாகாண சுகாதார சேவைகளுக்கு 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையினால் வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை வைத்திய சாலைகளிலேயே பெற்றுக் கொள்ள முடியுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டிபன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கொரோனோ வைரஸ் தொற்று தாக்கம் வடக்கு மாகாணத்திலும்; ஏற்பட்டுள்ள நிலையில் இங்குள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. அதனால் வைத்தியர்கள் தமது வீடுகளையும் தமது பிரச்சனைகளையும் மறந்து கடமையாற்றி வருகின்றனர். அதே போல பொதுச் சுகாதார பரிசொதகர்கள் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் பணியளார்களும் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கடமையாற்றி வருகின்ற வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாதுகாப்பு அங்கிகள் முதல் அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு அங்கிகள், மாஸ்க், தொற்று நீக்கித் திரவங்கள் அனைத்தையுமு; வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் வழங்கி வருகின்றனர்.
இதற்குரிய நிதிகளும் முக்கியமாக சுகாதார பணிப்பாளரால் வழங்கியுள்ளதாக அறிகிறோம். குறிப்பாக 80 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி இப்போது கைவசம் உள்ளதாகவும் இதனை கொரோனோ தொற்றுக்கு வடமாகாணம் முழுவதும் பயன்படுத்தமாறு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
ஆகையினால் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் வைததியசாலைகளில் அங்கியோ தொற்று நீக்கி திரவமோவா மாஸ்கோ இல்லையெனில் வைத்தியசாலை பணிப்பாளரை அனுகி கேட்டு பெறலாம். ஏனெனில் அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆகவே அதனூடாக தேவையானதைப் பெற்றுக் கொண்டு சேவையில் ஈடபடலாம் என்றார்.

Post a Comment