கொரோனோ தொற்று இன்றைய நிலவரத்தை வெளியிட்டுள்ள யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் - Yarl Voice கொரோனோ தொற்று இன்றைய நிலவரத்தை வெளியிட்டுள்ள யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் - Yarl Voice

கொரோனோ தொற்று இன்றைய நிலவரத்தை வெளியிட்டுள்ள யாழ் வைத்தியசாலை பணிப்பாளர்

யாழ் போதனா வைத்தியசாலையின் இன்றைய நிலவரம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.

கொரோனோ தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரையில் இலங்கையில் நுர்ற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுத் தாக்கத்திற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  இருவர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் கொரோனோ தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.  அதே நேரத்தில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் பரிசொதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்களில் தற்போது பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தகவல்களை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் இன்றையதினம் வெளியிட்டுள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post