தன்னிறைவான கிராமங்கள் என்ற திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - சபாகுகதாஸ் - Yarl Voice தன்னிறைவான கிராமங்கள் என்ற திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - சபாகுகதாஸ் - Yarl Voice

தன்னிறைவான கிராமங்கள் என்ற திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - சபாகுகதாஸ்

தன்னிறைவான கிராமங்கள் என்ற திட்டமே நாட்டிற்கு ஆரோக்கியம் என்பதால் அந்தத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என  வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞரிணிச் செயலாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது..

கொவிட் 19  உலக ஒழுங்கு முறையினை என்றும் இல்லாத வகையில் சீர்குலைத்துள்ளது. இதனால் நாடுகளிடையேயான பொருளாதார பரிமாற்றங்கள் ஆபத்தானவை என்ற நியதியை மக்கள் மனங்களில் தீயாக பரப்பியுள்ளது.

இதனால் பிரதான உணவுப் பொருட்களை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த இலங்கை போன்ற நாடுகளுக்கு கொரோனா தொடர் கதையாகும் போது பாரிய அடிப்படை பிரச்சினைகளை ஏற்படுத்தவுள்ளது.

இதனை எதிர் கொள்ள இலங்கை அரசாங்கம் உடனடியாக தன்னிறைவான கிராமங்கள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக வேண்டும். இலங்கை தீவு 70மூ கிராமங்களின் கட்டமைப்பை கொண்டிருப்பதால் நாட்டின் நுகர்வுத் தன்மையை கிராம மட்டத்தில் நிறைவு செய்ய இத் திட்டம் சிறந்தாக அமையும்.

 தன்னிறைவான கிராமத்தில் விவசாயம் கால்நடைவளர்ப்பு மீன்பிடி கிராமியக் கைத்தொழில் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்புக்கள் இல்லாது கிராமங்களை பசுமைப் பிரதேசங்களாக மாற்ற முடியும்.

 தன்னிறைவான கிராமத்தின் செயற்பாட்டை நிர்வகிக்க தற்போது கிராம ரீதியாக  கிராம உத்தியோகத்தர் பொருளாதார உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற நிர்வாக கட்டமைப்பு போதியதாக உள்ளமையால் மனித வளங்களை திட்டமிட்டு வழிப்படுத்தினால் 6 மாதங்களில் இலங்கைத் தீவின்70 விதமாான மக்களின் வாழ்வாதாரம் தங்கிவாழ்வோர் என்ற நிலையை கடந்து தன்னிறைவான கிராமங்கள் என்ற நிலையை அடைமானமாக பெற்றுவிடும்.

அரசாங்கம் இத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கு உரிய ஆரம்ப உதவிகளை மேற்கொண்டு கிராமங்கள் இடையேயான வர்த்தக வலையமைப்பை சிறப்பாக மேற்கொள்ளும் போது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பல சவால்களை இலகுவாக எதிர்கொள்ள முடியும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post