யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலய உபய நிதியில் உதவி - புலம்பெயர் உறவுகளும் ஆதரவு - Yarl Voice யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலய உபய நிதியில் உதவி - புலம்பெயர் உறவுகளும் ஆதரவு - Yarl Voice

யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலய உபய நிதியில் உதவி - புலம்பெயர் உறவுகளும் ஆதரவு


வருடாந்த மணவாளக் கோலத் திருவிழாவினை நிறுத்தி அந்த உபய நிதியில் ஊர் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சரசாலை காளி கோவிலின்  முன்மாதிரியான செயற்பாட்டை ஊடகங்கள் உலகிற்கு வெளிக்கொண்டு வந்ததையடுத்து புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற அடியவர்கள் நிவாரண பணிகளுக்காக நிதியினை  வழங்கி வருகின்றனர்.

தென்மராட்சியின் சரசாலை காளி கோவில் அறப்பணி சபையானது நாட்டில் நிலவும் சூழ்நிலைகாரணமாக தமது வருடாந்த மணவாளக்கோலத் திருவிழாவினை நிறுத்தி அத்திருவிழா உபயநிதியில்  இருந்து சுமார் 150  குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியிருந்தது.

இந்த ஆலயத்தின் முன்மாதிரியான  செயற்பாட்டை ஊடகங்கள் செய்தியாக்கியிருந்தன.  இச்செய்தியை பார்த்த புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற ஆலயத்தின் அடியவர்கள் நிவாரணப் பணிகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளார்கள்.

இந்நிதியில் இருந்து சரசாலை தெற்கு ஜேஃ316 மற்றும் சரசாலை வடக்கு ஜேஃ317 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 230 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை இன்று வழங்கி வைத்தனர்.

மேலும் அக்கிராமத்தில் இருக்கின்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகளையும் அப்பகுதி குடும்பநல உத்தியோகத்தரிடம் வழங்கி வைத்தனர்.

 சரசாலை காளி கோவில் அறப்பணி சபை நிர்வாகத்தில் இளைஞர்களை உள்ளீர்த்து வெளிப்படைத் தன்மையோடு முனமாதிரியாக செயற்படுவதினைப் போன்று ஏனைய ஆலயங்களும் பொது அமைப்புக்களும் செயற்பட்ட பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வருவார்கள் என்று தென்மராட்சியின் நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post