கொரோனோவிலிருந்து மீண்டோருக்கு மீண்டும் சோதனை இல்லை - மாகாண சுகாதாரப் பணிப்பாளர் - Yarl Voice கொரோனோவிலிருந்து மீண்டோருக்கு மீண்டும் சோதனை இல்லை - மாகாண சுகாதாரப் பணிப்பாளர் - Yarl Voice

கொரோனோவிலிருந்து மீண்டோருக்கு மீண்டும் சோதனை இல்லை - மாகாண சுகாதாரப் பணிப்பாளர்

கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அதிலிருந்த குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் முடிவடைய மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்று இருப்பதாக 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர். இவர்களில் ஐந்து பேர் குணமடைந்து கட்டம் கட்டமாக யாழிலுள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு சிகிசிச்சை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் 14 நாட்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அவ்வாறு சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு மீண்டும் சோதனை நடாத்தப்பட மாட்டது.

அதாவது கொரோனோ தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் இருக்க வேண்டும். அவர்களுக்கு சோதனை செய்யத் தேவையில்லை என்று சுகாதர அமைச்சு எங்களுக்குத் தெரிவித்திருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post