கொரோனோ நோயாளியால் முடக்கப்பட்ட தாவடிக் கிராமம் புதுவருட தினத்தில் விடுவிப்பு - Yarl Voice கொரோனோ நோயாளியால் முடக்கப்பட்ட தாவடிக் கிராமம் புதுவருட தினத்தில் விடுவிப்பு - Yarl Voice

கொரோனோ நோயாளியால் முடக்கப்பட்ட தாவடிக் கிராமம் புதுவருட தினத்தில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகிய முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்ட பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முற்றுகைக்குள்ளிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு 203  பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக யாழ்ப்பாணத்தில் முதலாவது அடையாளம் காணப்பட்ட நபர் யாழ் தாவடிப் பகுதியைச் சேர்ந்தவர்.

ஆகையினால் அவரது வசித்த பகுதி முழுவதும் கடந்த 21நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பாதுகாப்புப் படைகளின் முற்றுக்ககைக்குள் இருந்து வந்தது.

 இவ்வாறான நிலையில் மெலும் கொரோ னா தொற்று உறுதிப்படுத்தப்படாத சிலையில் அந்த தாவடிப் பகுதி இமுழுவதும் பாதுகாப்பு படை முற்றுகையிலிருந்த வருடப்பிறப்பான இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை நாட்களாக அப்பகுதிக்கு உட்செல்லவும் அப்பகுதியிலிருந்த வெளியேறவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post