இவ்வாறு தெரிவித்துள்ள ஈழ மக்கள் புருட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் ஆளுந்தரப்பினர் அக்கறை கொண்டிராவிட்டாலும் இன்றிருக்கக் கூடிய நிலைமையில் பாராளுமனறத்தைக் கூட்டுவதனூடாகவே பல்வெறு விடயங்களுக்கும் சரியானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க முடிமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு குறிக்கப்பட்ட ஒரு காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் அதே போல புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்பதும் ஏற்கனவே ஒரு அரசியல் சாசனத்திற்கிணங்க அறிவிக்கப்பட்ட விடயங்களாக இருக்கின்றது. அதன் பிரகாரம் ஏப்pரல் 25 ஆம் திகதி தேர்தல் நடந்திருக்க வேண்டும். மே மாதம் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் உலகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய முக்கயமான கொரோனோ வைரஸ் பிரச்சனை என்பது இலங்கையையும் பாதித்திருக்கிறதென்பதால் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்திருப்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள்.
இந்த நிலையில் எப்பொது கொரோனோ வைரஸ் பிரச்சனை என்பது தீரும் மக்கள் எப்பொது சுமூகமான நிலைமைக்கு வருவார்கள் என்பது யாருக்குமே தெரியாத நிலைமை இரக்கின்றது. இலங்கையின் பல பகுதிகளும் தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டத்திற்குள் இருக்கின்றது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மிக நீண்டநாட்களாக தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டத்திற்குள் நாங்கள் இருந்து வருகின்றோம். அதனால் எந்தவnhரு விடயத்தையுமு; செய்ய முடியாத சூழ்நிலையில் தான் நாங்கள் இருக்கிறொம்.
இவ்வாறான சூழ்நிலையில் தேர்தலை நடாத்துவதென்பது முடியாத காரியமென தேர்தல் ஆணையாளரே அறிவித்திருக்கிறார் என்பது ஏற்கனவே ஊடகங்களில் வந்திருக்கிறது. அதே சமயம் தேர்தல் ஆணையாளர் இன்னுமொரு விடயத்தையும் கூறியிருக்கின்றார்.
அதாவது இந்த விசயத்திற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பராளுமன்றம் கூடி இந்த விடயங்களைச் செய்ய வேண்டுமென்பது எல்லொராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விசயமாக இருக்கிறது.
ஆனால் இந்தப் பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக இப்போது ஆளுந்தரப்பிற்குள் இருக்கக் கூடிய ஐனாதிபதியோ பிரதமரோ பெரியளவில் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தேர்தலை நடாத்த வேண்டுமென்று அவர்கள் விரும்பலாம். ஆனால் தேர்தலை நடாத்தக் கூடிய சூழ் நிலை இருந்தால் மாத்திரம் தான் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஆவ்வாறான சூழ்நிலையில் இப்பொழுது நாட்டில் மிக மோசமாக கொரோனோ வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிக்கபபட்டிருக்கின்றனர். குறிப்பாக ஊரடங்கால் பசி பஞ்சம் பட்டினி போன்ற நிலைமைகள் ஏற்பட்டிருப்பதால் இவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
ஆகவே பாராளுமன்றத்தைக் கூட்டி அந்த மக்களுக்கான நிவாரணங்களை உதவிகளை செய்யவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பசி பஞ்சத்தால் மக்கள் உணவு தேடி அலையும் ஒரு சூழ்நிலை ஏற்படுத்தக் கூடாது.
ஆகவே முதன்மையாக அந்த மக்களின் நன்மை கருதி அது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் யாராக இருந்தாலும் கூட இந்த ஊரடங்குச் சட்டத்தினாலும் கொரோனோ வைரஸ் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய ஏழை மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையிலாவது பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனுர்டாக இந்த மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதே போல ஒரு அரசியல் சாசன அடிப்படையில் தேவையான சட்டங்களை இயற்றி மக்களுக்கு இந்த உதவிகள் கிடைக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சரியான சந்தர்ப்பத்தில் தேர்தலை நடாத்துவதற்கான முடிவுகளும் சட்ட ரீதியாக எட்டப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். அந்தவகையில் ஐனாதிபதி பிரதமர் போன்றோர் காத்திரமான முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டுமென்பதும் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.
Post a Comment