பலாலியில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு சில தினங்களில் மீண்டும் கொரோனோ பரிசோதனை - Yarl Voice பலாலியில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு சில தினங்களில் மீண்டும் கொரோனோ பரிசோதனை - Yarl Voice

பலாலியில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு சில தினங்களில் மீண்டும் கொரோனோ பரிசோதனை

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்போது உள்ளவர்களுக்கு இன்னும் சில தினங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனாவில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த மத போதகர் ஒருவருடன் பழகிய ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த மத போதகருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த சுமார் 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முதலில் 6 பேருக:கு கொரோனோ தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் பின்னர் ஏனைய 14 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அதிலும் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் பின்னர் ஏனைய 6 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 2 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் தற்போது எஞ்சியுள்ள 4 பேருக்கும் கொரோனோ தொற்று பரிசோதனை செய்வதற்கு சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தீர்மானித்திருக்கின்றார்.

இதனடிப்படையில் குறித்த 4 பேருக்கும் இன்றும் சில தினங்களில் யாழ்ப்பாணத்தில் கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post