ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனோவை மறந்து மதுபான நிலையங்கள் முன்பாக திரண்ட கூட்டம் - Yarl Voice ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனோவை மறந்து மதுபான நிலையங்கள் முன்பாக திரண்ட கூட்டம் - Yarl Voice

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனோவை மறந்து மதுபான நிலையங்கள் முன்பாக திரண்ட கூட்டம்

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்ட நிலையில் மதுபான நிலையங்களின் முன்னாலும் குடிமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

கொரோனோ வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதங்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நிண்ட வரிசைகளில் நின்று பொருட்களைச் வாங்கிச் சென்றிருந்தனர். அதே போல வங்கிகள் மருந்தகங்களிலும் வரிசை வரிசையாக பெருமளவிலான மக்கள் நின்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள பல மதுபான விற்பனை நிலையங்களிலும் பெருமளவிலானொ நீண்ட வரிசைகளில் காத்து நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post