ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் உயிரிழிப்பு - Yarl Voice ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் உயிரிழிப்பு - Yarl Voice

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் உயிரிழிப்பு


ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில் மன்னாரில்; இடம்பெற்ற விபத்தில் சகோரிகள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மன்னார் பரப்பான்கண்டல் பகுதயில் இன்று மதியம் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வரும் சந்தியோகு டெரன்சி (வயது-25)  ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முன்னார் பரப்பான்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிலும் கெப் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானிதில் மோட்டார் சைக்கிலில் பயணம் செய்த கட்டையடம்பன் பகுதியைச் சேந்த இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 சடலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளது. இதே வேளை கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post