நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் கொரோனோ தொற்று இல்லை - Yarl Voice நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் கொரோனோ தொற்று இல்லை - Yarl Voice

நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் கொரோனோ தொற்று இல்லை

நாவந்துறையில் வீடுகளில்  சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் மாதிரிகள் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதா என அறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்ற நாவந்துறையைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தபட்டுள்ளனர்.

அவர்கள் 8 பேரின் மாதிரிகளே கோரோனா தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனைக்கு இன்று பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவர்கள் 8 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post