கொரோனோ பணிகளுக்காக வடக்கிலுள்ள ஐந்து பாடசாலைகளை வழங்குமாறு படைத்தரப்பு கோரிக்கை - Yarl Voice கொரோனோ பணிகளுக்காக வடக்கிலுள்ள ஐந்து பாடசாலைகளை வழங்குமாறு படைத்தரப்பு கோரிக்கை - Yarl Voice

கொரோனோ பணிகளுக்காக வடக்கிலுள்ள ஐந்து பாடசாலைகளை வழங்குமாறு படைத்தரப்பு கோரிக்கை

கொரோனோ பணிக்காகவென உடனடியாக மேலும் 5 பாடசாலைகள் படையினரின் பயன்பாட்டிற்கு வேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் படையினர் கோரியிருக்கின்றனர்.

இதற்காக யாழ்ப்பாணம் றிபோக் கல்லூரி கைதடி பாடசாலை என்பவற்றுடன் மன்னார் பேசாலை மற்றும் கிளிநொச்சி அழகாபுரி பாடசாலைகளும் முல்லைத்தீவு ஒலுமடு ம.வியும் கோவிட் -19ன் தொடர்பான நடவடிக்கைக்காக படையினரால் கோரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்ணின் கீழ் உள்ள குறித்த பாடசாலைகளில் சாவகச்சேரி றிபோக் கல்லூரியும் கைதடி பாடசாலையும் விடுமுறையில் சென்ற படையினர் முகாம் திரும்பும் நிலையில் 15 நாட்கள் இடைத் தங்கள் முகாமாக பயன் படுத்தவும். கோரப்பட்டுள்ளது.

இதேநேரம் பேசாலை சென்மேரிஸ் பாடசாலை கடற்படையினரால் கோரிப் பெறப்பட்டுள்ளது. இதற்காக மன்னார் மாவட்டத்தில் கடற்படையுனர் குறித்த பாடசாலையை பொறுப்பேற்றுள்ளதோடு இப் பாடசாலையில் மன்னார் மாவட்டத்தில் எவராவது கோவிட் 19் அறிகுறி காணப்பட்டால் தங்கவைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக படையினரால் கூறப்பட்டுள்றது.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டம் அரகாபுரி அ.த.க.பாடசாலையினை விமானப்படையினர் கோரிப் பெற்றுள்ளதோடு இரணைமடு விமானப்படைத் தளத்தில் கோவிட் -19ன் சந்தேக நபர்கள் தடுப்பில் இருப்பதனால் அங்குள்ள விமானப்படையினால் குறிப்பிட்டுள்ள அளவினர் இப்பாடசாலையில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றே மாங்குளம் ஒலுமடுப் பாடசாலையும் படையினரால் அவசரமாக கோரப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post