பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும் - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை - Yarl Voice பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும் - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை - Yarl Voice

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனை கொள்ள வேண்டும் - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கூடிய கரிசனை இன்மையே வடக்கு மாகாண கல்வி வீழ்ச்சிக்கு காரணம் என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் .பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில்  பரிட்சை பெறுபேற்றினை அதிகரிக்க வேண்டுமேயானால்  வடக்கு மாகாண கல்வித் திணைக்களமானது   பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில்  கரிசனையினை  ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே வடக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சியினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்

நேற்றுமுன்தினம் வெளியாகிய க பொ த சாதாரணதர பரீட்சை பெறுபேற்றின்படி வடக்கு மாகாணமானது அனைத்து மாவட்டங்களின் கடைசி மாகாணமாக  திகழ்கிறது.  இந்த விடயம் மாற்றப்பட வேண்டுமேயானால் வடக்கில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்துவதன் மூலமே சாத்தியப்படும்.

 ஏனெனில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் வளம் உட்பட அனைத்து வளங்களும் மிகச்சிறப்பாக காணப்படுகின்றன. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்தில் 13 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் காணப்படுகின்ற அதே போல் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களினால் அனைத்து பாடசாலைகளுக்கும் வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

 இவ்வாறான சூழ்நிலையில் பரீட்சைப் பெறுபேறுகளில்  முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்கு காரணம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமையே யாகும் இதேபோல் இலங்கையின் 99 வது கடைசி வலயமாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தீவக வலயம் காணப்படுகின்றது

இவ்வாறான நிலையை மாற்றியமைக்க வேண்டுமேயானால் மாகாண கல்வித் திணைக்களமானது பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பான கரிசனை ஏற்படுத்துவதன் மூலமே பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்



0/Post a Comment/Comments

Previous Post Next Post