எனது வாழ்வில் இதுபோல் இருந்ததில்லை - நடிகை ரகுல் பிரீத் சிங் - Yarl Voice எனது வாழ்வில் இதுபோல் இருந்ததில்லை - நடிகை ரகுல் பிரீத் சிங் - Yarl Voice

எனது வாழ்வில் இதுபோல் இருந்ததில்லை - நடிகை ரகுல் பிரீத் சிங்

இதுவரை எனது வாழ்க்கையில் இதுபோல் இருந்தது இல்லை என்று தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை ரகுல்பிரீத் சிங்இ தனது தற்போதைய பொழுதுபோக்கு குறித்து விளக்கி உள்ளார். அவர் கூறியதாவது:-

வாழ்க்கையில் லட்சியத்தை அடைய தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இயற்கை விபத்து வந்தால் எந்த அளவுக்கு தாங்கிக்கொள்ள முடியும் என்பதையும் நமக்குள் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதையும் கொரோனா உணர வைத்துள்ளது.

நமது ஆரோக்கியம் குடும்பம் நம்மை நேசிப்பவர்கள் அவர்களோடு இணைந்த நினைவுகள் விலை மதிக்க முடியாதது.

மார்ச் 18-ந்தேதி நான் கடைசியாக சினிமாவில் வேலை பார்த்த நாள். அதன்பிறகு வீட்டில்தான் இருக்கிறேன். காலையில் எழுந்து யோகா பயிற்சியோடு எனது நாள் தொடங்குகிறது. அதன்பிறகு புத்தகங்கள் படிக்கிறேன். மதியம் சமூக வலைத்தளங்களை பார்க்கிறேன்.

மாலையில் படம் பார்க்கிறேன். சில வெப் தொடர்களையும் பார்க்கிறேன். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்களையும் பார்க்கிறேன். சமையலும் செய்கிறேன்.

நம்மை வலுப்படுத்திக்கொள்ள இந்த நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று நான் தெரிந்து வைத்து இருக்கிறேன். இந்த நீண்ட ஓய்வு இதுவரை எனது வாழ்க்கையில் வந்தது இல்லை. இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post