பர்முயுலா-1: பிரிட்டீஷ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடைபெறுவதில் சிக்கல்! - Yarl Voice பர்முயுலா-1: பிரிட்டீஷ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடைபெறுவதில் சிக்கல்! - Yarl Voice

பர்முயுலா-1: பிரிட்டீஷ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடைபெறுவதில் சிக்கல்!

இளசுகளின் விருப்ப விளையாட்டான பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின், நடப்பு ஆண்டுக்கான பிரிட்டீஷ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரித்தானியாவுக்கு வருகை தரும் வீரர்கள் மற்றும் போட்டி தொடர்புப்பட்ட அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
ஆனால் இதை ஏற்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக பர்முயுலா-1 தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் தீர்வு எட்டப்பட்ட பிறகே இப்போட்டி நடைபெறுமா இல்லையா என்பது குறித்து தெரியவரும் என கூறப்படுகின்றது.
பிரிட்டிஷ் கிராண்ட்பிரிக்ஸ் பந்தயம், எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதி சில்வர்ஸ்டோன் ஒடுதளத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, நடப்பு ஆண்டுக்கான பர்முயுலா-1 கார்பந்தயத் தொடர் இன்னமும் ஆரம்பிக்கபடவில்லை.
இத்தொடரில் தற்போதுவரை 7 சுற்றுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 சுற்றுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது எஞ்சிய 12 சுற்றுப் போட்டிகளை நடத்துவதற்கு, பர்முயுலா-1 கார்பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post