மைக்கலின் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்குவாழ்வாதார உதவியாக ரூபா 12,0000 வழங்கி வைப்பு - Yarl Voice மைக்கலின் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்குவாழ்வாதார உதவியாக ரூபா 12,0000 வழங்கி வைப்பு - Yarl Voice

மைக்கலின் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்குவாழ்வாதார உதவியாக ரூபா 12,0000 வழங்கி வைப்பு


 சிறு குடிசையில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வந்த  குடும்பத்தின் குடிசை விசமிகளினால் எரிப்பு

 கைக்குழந்தையுடன் வசிக்க வீடு இன்றி  அயல் வீடு ஒன்றில் தாங்கியிருக்கும் பரிதாபம்

வடமராட்சி கெருடாவில் பகுதியில் மிகவும் வறுமையான நிலையில் சிறு குடிசை அமைந்து வசித்து வந்த சுகிந்தன் ஜெயசாந்தினி என்ற பெண்ணின் வீடு இனம் தெரியாத விசமிகளினால் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளது ,

கணவர் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சிறு  வருமானத்தை கொண்டு எந்த அடிப்படை வசதிகளும் இன்றி ஒரு கைக்குழந்தையுடன் வசித்து வருகின்றனர்
[ads id="ads1"]
வசித்த சிறு வீடு இவர்களின் உடமைகள் அனைத்தும் எரிந்துள்ளது தற்போது எந்த உதவிகளும் இன்றி ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டமான நிலையிலும்  அயல் வீட்டில் தாங்கியுள்ளனர்

கருணையுள்ளம் கொண்டவர்கள் இவர்களுக்கு சிறு குடிசை அமைக்க அவசர தேவையாக உள்ளது உங்களினால் முடிந்த உதவிகளை செய்ய முன்வாருங்கள் என  கோரியிருந்தனர் அதற்கு அமைவாக மைக்கலின் நேசக்கர ஒருங்கிணைப்பாளர் கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் ரூபா 32000 பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் திருமதி சுபேந்திரா சுஜி 23,000 ஆகியோர் வழங்கிய நிதியில் இருந்து 16-05-2020 ரூபா 55000 வழங்கி வைக்கப்பட்டது




ஒரு  வேளை உணவுக்காக போராடும் மூன்று உயிர்கள் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வருங்கள்

அச்செழு பூலசிட்டி பிரதேசத்தில் விசேடதேவைக்குட்பட்ட சிறுவன் ஒருவன் தாய் தந்தை இன்றி பேரனின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்

பெற்றோர் இல்லாத நிலையில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். பேரன் கூலி வேலைக்கு சென்று அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே குடும்ப செலவும் கல்வி பயிலும் இன்னொரு பேரனின் செலவுகளையும் ஈடுசெய்து வந்துள்ளார்.
[ads id="ads2"]
தற்போது வயது முதிர்ந்த நிலையில் தொழில் செய்ய முடியாது வறுமையில் வாழுகின்றனர். அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் கல்வியில் திறமை வாய்ந்தவாராக காணப்படுகிறார்.

விசேட தேவைக்கட்பட்ட சிறுவனின் தேவைகளையும் கல்வி பயிலும் மாணவனின் செலவுகளையும் பூர்த்தி செய்ய முடியாது கஸ்ரப்படும் இவர்கள் மாதாந்த கல்விக்கான உதவி கோரியுள்ளனர் அதற்கு அமைவாக இன்று 16-05-2020  சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் விபுசன் அலிசா அவர்கள் வழங்கி நிதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மாணவனின் கல்வி செயற்பட்டுக்கு மாதாந்தம்  மைக்கலின் நேசக்கர ஒருங்கிணைப்பாளர் கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் வழங்கிய ரூபா 5000 வழங்கி வைக்கப்பட்டது



இராஜகிராமம் கரவெட்டி மேற்கு கரவெட்டி என்ற முகவரியை சேர்ந்த நவரட்ணராஜா லவன் என்பவர் போலியோ நோயினால் இரு கால்களும் முற்றாக இயங்காதவர். 4 பேர்களைக் கொண்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம். தாய் சந்தையில் வியாபாரம் செய்து பிள்ளைகளை வளர்த்தார்.சகோதரியும் இவரைப்போல் இருகால்களும் இயலாதவர். சக்கரநாற்காலியில் நடமாடுபவர்.இன்னொரு சகோதரர் படித்துவிட்டு இருக்கிறார். நவரட்ணராஜா லவன் அவர்களுக்கு அரச உதவியாக வடைவண்டில் வழங்கப்பட்டு அதன் மூலம் வருமானத்தைப் பெற்று கால்இயலாமையிலும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவர் வடைக்கு தேவையான உழுந்து,பருப்பு என்பவற்றை அரைப்பதற்கு மின்மோட்டார் இயந்திரம் இருந்தால் தனது வியாபாரத்தை இன்னும் மேம்படுத்தலாம் என கூறியிருந்தார். அதற்கு அவர் மின்மோட்டாருடன் கூடிய இயந்திரம் 40 000/- செலவாகும் எனவும் அதனை மைக்கல் நேசக்கரம் ஊடாக பெற்று தரலாமா? எனக்கோரியிருந்தார். அதற்கு அமைவாக இன்று 16-05-2020 சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் திருமதி கணேசலிங்கம் வனிதா அவர்கள் வழங்கிய ரூபா 40,000 வழங்கி வைக்கப்பட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post