பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் +545 இறப்புகள் – மொத்த மரணங்கள் 35 ஆயிரத்தைக் கடந்தன - Yarl Voice பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் +545 இறப்புகள் – மொத்த மரணங்கள் 35 ஆயிரத்தைக் கடந்தன - Yarl Voice

பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் +545 இறப்புகள் – மொத்த மரணங்கள் 35 ஆயிரத்தைக் கடந்தன

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +545  இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் +160 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று மீண்டும் +385 ஆல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 35,341  ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிதாக அடையாளம் காணப்பட்ட +2,412  தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 248,818 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, பிரான்ஸில் +131 இறப்புகளும், இத்தாலியில் +162 இறப்புகளும், ஸ்பெயினில் +69 இறப்புகளும், பெல்ஜியத்தில் +28 இறப்புகளும், ஜேர்மனில் +53 இறப்புகளும், சுவீடனில் +45 இறப்புகளும், ரஷ்யாவில் +115 இறப்புகளும், மறுபுறம் மெக்ஸிக்கோவில் +155 இறப்புகளும், பிறேசிலில் +656 இறப்பகளும், கனடாவில் +67  இறப்புகளும், பேருவில் +125 இறப்புகளும்,  இந்தியாவில் 145 + இறப்புகளும், பதிவாகி உள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 92 ஆயிரத்தைக் கடந்து 92,957ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,563,311 உயர்ந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post