யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில்  காற்றின் தாக்கத்தின் காரணமாக  66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்
[ads id="ads1"]
அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும்உணரப்பட்டுள்ளநிலையில்   யாழ்ப்பாண மாவட்டத்தில்  காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர்  என்.சூரிராஜ்தெரிவித்துள்ளார்

கடந்த பதினேழு மற்றும் பதினெட்டாம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறைபிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 166 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன்  காரணமாக கரையோரப் பகுதிகளில்வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலத்திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பாக  மீனவர் சமூகத்தினர்விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது
[ads id="ads2"]

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post