விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பில் கதைக்க புளொட் அமைப்பிற்கு அருகதையில்லை - அனந்தி தெரிவிப்பு - Yarl Voice விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பில் கதைக்க புளொட் அமைப்பிற்கு அருகதையில்லை - அனந்தி தெரிவிப்பு - Yarl Voice

விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பில் கதைக்க புளொட் அமைப்பிற்கு அருகதையில்லை - அனந்தி தெரிவிப்பு

அரசாங்கத்தின் ஒட்டு குழுக்களாக செயற்பட்ட புளொட் அமைப்பை போன்ற அமைப்பினருக்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் இல்லை ஈழத் தமிழர் சுயாட்சி கழக கட்சியின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் வைத் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அனந்தி சசிதரன்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அனந்தி சசிதரன் மேலும் தெரிவிக்கையில்...
[ads id="ads1"]
 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைந்து ஒட்டு குழுக்களாக செயல்பட்டு மக்களை துன்புறுத்திய புளொட் அமைப்பை போன்ற ஆயுதக்குழுக்கள் தற்பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுப்பீர்களேயானால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று விடுவார்கள் எனவே அவர்களை அழிக்க வேண்டும் என கூறியவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படும்போது புளொட்  அமைப்பு விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்படவுமில்லை.
[ads id="ads2"]
அவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் அதாவது விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தான் கூட்டமைப்பில் இணைந்தவர்கள் எனவே  தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது என அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post