பகிரங்க விவாதத்திற்கு தயாரா? சுமந்திரனுக்கு சுகாஷ் சவால் - Yarl Voice பகிரங்க விவாதத்திற்கு தயாரா? சுமந்திரனுக்கு சுகாஷ் சவால் - Yarl Voice

பகிரங்க விவாதத்திற்கு தயாரா? சுமந்திரனுக்கு சுகாஷ் சவால்


தமிழினத்தின் கடவுளான தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையோ அல்லது அவரது புனிதமான விடுதலைப் போராட்டத்தையோ கொச்சைப்படுத்த தமிழினத் துரோகி மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரன் அவர்களுக்கோ அல்லது அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ கிஞ்சித்தும் அருகதையில்லை.
[ads id="ads1"]
இவ்வாறு தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் சுமந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறான கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வாக்குகளால் பதிலடி கொடுக்க தமிழ் மக்கள் தயாராக வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.
[ads id="ads2"]
மேலும் சுமந்திரன் அவர்களே  தேசியத் தலைவரின் ஆயுதப் போராட்டம் சரியா???தவறா??? என்ற பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆகவே என்னுடன் நீங்கள் அந்த விவாதத்திற்கு வரத் தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post