எமக்காக இன்னுயிரைத் தியாகம் செய்தோருக்காக நீதி தேடுவோம் என்கிறார் சரவணபவன் - Yarl Voice எமக்காக இன்னுயிரைத் தியாகம் செய்தோருக்காக நீதி தேடுவோம் என்கிறார் சரவணபவன் - Yarl Voice

எமக்காக இன்னுயிரைத் தியாகம் செய்தோருக்காக நீதி தேடுவோம் என்கிறார் சரவணபவன்

நீதி தேடிய இந்த நெடிய இடரிய பயணத்தில் ஒவ்வொரு தமிழனும் பங்கெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எமது உறவுகளுக்காக - எமக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்காக இந்தப் பேரவலத்தின் பின்னரும் எஞ்சியிருக்கும் நாம் தான் நீதி தேட வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயேஇ அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழர்களின் வாழ்வில் குருதி தோய்ந்த சரித்திரம் எழுதப்பட்ட நாள் இன்று. மனிதாபிமானத்துக்கான போர் என்று பன்நாடுகளுக்கு பகிரங்க அறைகூவல் விடுத்துஇ ஒட்டுமொத்த தமிழினத்தையும் மனிதாபிமானமின்றி கொன்றொழித்த கொடுந் துயர் நாள். பன்நாட்டுச் சட்டங்கள் போர் விதிமுறை மீறல்கள் என்று எவற்றைப் பட்டியலிட்டுள்ளதோ அத்தனை மீறல்களையும் புரிந்து நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்த நாள்.
சாவுகளைக் கண்டு துவந்து விடவில்லை. அவற்றிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கின்றோம். நினைவுகளை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

இந்த நினைவுகளினூடாகஇ முள்ளிவாய்க்கால் நிலப் பரப்பில் பறித்தெடுக்கப்பட்ட உயிர்களின் சாவுகளிற்கு நீதி தேடிய பயணத்தில் ஆக்ரோசமாகப் போராட வேண்டியிருக்கின்றோம்.

கொல்லப்பட்ட உயிர்கள் எமக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் அந்த உயிர்களை கொன்றெடுத்தவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்தத் தண்டனைகள்இ எதிர்காலத்தில் இவ்வாறானதொரு மனிதப் பேரவலம் நிகழாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

நீதி தேடிய இந்த நெடிய - இடரிய பயணத்தில் ஒவ்வொரு தமிழனும் பங்கெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எமது உறவுகளுக்காக - எமக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்காகஇ இந்தப் பேரவலத்தின் பின்னரும் எஞ்சியிருக்கும் நாம் தான் நீதி தேட வேண்டும்.

நீதிக்கான பயணத்தின் ஓர் அங்கமாகஇ நினைவேந்தல்களை கடைப்பிடிக்க வேண்டும். எமது தார்மீகக் கடமையைப் பிறர் மீது சுமத்துவதை விடுத்து - சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக் கழிப்பதை விடுத்துஇ செவ்வனே நிறைவேற்ற வேண்டும். ஈழத் தமிழினம் தனது ஒன்றிணைந்த எழுச்சியை வெளிப்படுத்தஇ முள்ளிவாய்க்கால் மண்ணில் மூச்சடங்கியோருக்காக வீடுகளிலிருந்து நினைவுகூர வேண்டும் - என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post